பக்கம்:மீனோட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு வெள்ளி முளைத்து, கிழக்கில் வெண்மை படரும் வேளை யில், திடீரென்று அவ்வீடு கண் முன் தோன்றியதும், வழி தப்பி இரவெல்லாம் தேடித் தவிக்கும் அவ்வழிப் போக்கர் களுக்கு அது ஏதோ கடவுள் அருளிய வரம் போலிருந்தது. மார்பில் ஒரு கையை வைத்து, பகவானை வாழ்த்தி வீட்டை நோக்கி ஒர் அடி முன்னெடுத்து வைக்கையில்... புதரொன்று சலசலத்தது. அவனுக்கு வயிறு பகீரென்றது. இத்தனை நாழி இரவெல் லாம் பூச்சி பொட்டுக்குத் தப்பிய பின், விமோசனம் நேரும் வேளையில்... இவனைப் போன்றே, தூசி படிந்து, உருக்குலைந்து, ஆடைகிழிந்து மற்றோர் ஆள் புதர்களை விலக்கிக் கொண்டு இவன் எதிரில் வந்து நின்றான். இருவரும், ஒருகணம் ஒரு வரை ஒருவர் நோட்டம் பார்த்து நின்றனர். - அதோ...துாரத்தில் ஓங்கிப் படர்ந்த மலைச் சாரலுக்கும், அதையொட்டி அடர்ந்த புதர்ப் பிரதேசத்துக்கும், பிறகு கண்ணுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளிக்கும். அதில் அங்கங்கே சிதறிய சிறு வயல்களுக்குமிடையில் பட்டை தீட்டியது போல் ஒடும் அருவி...இம்மாதிரி இயற்கை வெளி விளங்கும் இவ்விடத்தில் இவ்விரு மனிதப் புழுக்களும் பரஸ்பரம் பார்த்து வெறிப்பது விபரீதத்தின் வேடிக்கைதான். பிறகு, புது ஆசாமி, ஒரு பெருமூச்சுவிட்டு, பார், தன்னை முழுக்கும் இரவைச் சமாளித்துக் கொண்டு வெளிக் கிளம்பும் இரவியின் வேளையில், இவ்வீடு, இரவெனும் மாடு நடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/54&oldid=870409" இலிருந்து மீள்விக்கப்பட்டது