பக்கம்:மீனோட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மீனோட்டம் நிசியில் ஈன்றெடுத்து மறைக்க முடியும், மர்ம மகவு போல் இருக்கிறது... - مر - இந்தக் கற்பனையைக் கேட்டதும், மற்றவளின் முகத்தில் அருவருப்புத் தட்டியது. 'இதென்ன இழவு! நான் ஏதாவது கவியரசுடன் இந்தத் தனி இடத்தில் மாட்டிக் கொண்டேனா என்ன?” ஆம் நான் கொஞ்சம் கவிதான்-ஆனால் இன்னும் அரசாகவில்லை-நீயார்? வேறிடத்தில் இப்படி ஒருவரையொருவர் முன்பின் அறியாமல் ஒருமையில் பேசியிருந்தால், அப்பொழுதே ஒருவர் (முன்) குடுமியை ஒருவர் பிடித்துக் கொண்டிருப்பார். ஆனால், இங்கேயோ சமூகத்தின் கோட்பாடுகளும் மரியாதையுமெல்லாம் வெறும் புரளியேயாகும். 'நான்...நான்...கதாசிரியன்...” "ஓஹோ...வியாசரோ?...” 'நான் அவ்வளவு பெரிய காவிய கர்த்தா அல்ல... ஏதோ...” 'நான் வியாசனைக் குறிக்கவில்லை...வியாசர் என்றால், வியாசம் எழுதுபவன் என்று அர்த்தம்...' கதாசிரியனின் கைகள் குறுகுறுவென்றன. சிரமப்பட்டுச் சமாளித்துக் கொண்டு, எனக்குக் கவிதையில் நம்பிக்கை யில்லை. மூக்கு எங்கே என்றால், மண்டையைச் சுற்றிப் பிடிக்கும் வழக்கம் எனக்கில்லை; நேரே தான் பிடிப்பேன். இப்பொழுது எதிரிலிருக்கும் வீடு, எனக்கு வீடாய்த்தான் தோன்றுகிறது. எனக்குப் பசிக்கிறது. பசி என்றால்,சாதாரண மல்ல; அடிவயிற்றைக் கிள்ளுகிறது. ஆனால், உன்னுடைய கோளாறு எப்படி இதை விஸ்தரிக்கிறதோ இம்மெய்யனல் ஆகுதியைத் தேடி அளாவுகிறது...” ‘அனலில், மெய்யனல், பொய்யனலென்றும் உண்டோ?” 'சரி சரி உன் வித்தையை உனக்கே நான் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறதே! மெய் என்றால் உடல் அனல் என்றால் நெருப்பு. இது தெரியாதா?” - கவியின் முகத்தில் அசடு தட்டிற்று உனக்கும் நமக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/55&oldid=870411" இலிருந்து மீள்விக்கப்பட்டது