பக்கம்:மீனோட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎TG盘 83 உங்களை கவனிச்சுக்கும்படி சொல்லிட்டுப் போய் இருக்காரு உங்களிடம் எந்தக் க்ணக்கும் கேக்கக்கூடாது. சொல்லக் கூடாது நீங்க சொன்னதை உடனே செய்யணும்னு உத்தரவு. அவளுக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. “எனக்கு ஒண்ணும் வேண்டாம். எங்கேயாவது நல்ல மோர் கிடைக்குமா? "ஒ இந்தச் சந்து முனைலே ஒரு ஆயா சில்லுன்னு பான்ைலே விக்கறா. ஒரு கிளாஸ் இருவது பைசா ரெண்டு வாங்கிவாரேன், கூஜாவுலே தண்ணியை மாத்திட்டு போறேன். கீழே ப்ோனவன் இரவு பூராத் திரும்பி வரவில்லை. இளக் கிக்க மோரோ, நீரோ இல்லாமல் இறுகிப்போன தயிருஞ் ச்ாதம் மாரில் வில்லுண்டையாய் அடைத்தது. அவருக்கு நல்ல வேளையாய் இட்லி மெதுவாய் இருந்தது. மிஞ்சின இரண், டைக் கெர்டுக்க அவனைத் தேடி, பிறகு வேறு வழியில்லாமல் வாசலுக்கு வெளியே, வாஷ் பேஸினடியில், குப்பைத் தொட்டியில் எறியும்படி ஆயிற்று. அதிலிருந்து கும்பி நாற்றம் குடலைக் குமட்டிற்று. ஸ்ஹிக்காமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடிவந்துவிட்டாள். கோடி_அர்ச்சனைக்கு டிக்கட் அனாசாரம்தான் போலருக்கு. புண்ணியத்தை எப்படியெல்லாம் தேடறோம். புது இடமோ என்னவோ தெரியல்லே, ராப்பொழுது சரியாகத் துர்க்க மில்லை. விடியற் காலம் கண்ணசந்துட்டு தூக்கிவாரிப் போட்டாற்போல் விழிப்பு வந்ததும் கூடவே ஜன்னலுக்கு வெளியே கோயில் ஸ்தூபி மேல் வெய்யிலும் வந்து விட்டது. அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம். உடம்பு முறித்துப் போட்டாற்போல வலித்தது. திறந்த தும் எதிரே முருகன் துடைப்பத்தோடு நின்றான். (காலையில் எழுந்ததும் நல்ல முகமுழி) “என்னடா முருகா, மோர் வாங்கப் போனவன் மாடு பிடிக்க சநதைக்கே போயிட்டையா? அவன் முகத்தில் அசடு வழிந்தது. கேலிப்பொம்மைக் குப் போல் முருகனுக்கு முகம் பூரா முழிதான். அவன் உதட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/84&oldid=870461" இலிருந்து மீள்விக்கப்பட்டது