பக்கம்:மீனோட்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிலில் அமர வைத்தாள். சுற்றும் முற்றும் அவள் பார்வை வெள்ளோடிற்று. ஒரு ஜன்னல் கம்பியிலிருந்து இன்னொரு ஜன்னல் கம்பிக்கு ஓடிய கொடியில் லாலிபீலி என்று துணிகள் தொங்கின. அழுக்கும், அவசரமும், கசங்க லுமாய், சொக்காய், பனியன், பாண்ட், வேஷ்டி-அம்பி லுங்கிக்ட கட்டறானா? எதிர் மூலையில் ஆள் உயரக் கண்ணாடி அடியில் ஒரு முக சுவர செட்டு இன்னும் அலம்பாமல் மயிரோடு காய்ந்து, உலர்ந்து கிடந்தது. சீப்பில் அரை டஜன். அது என்ன வாரல்ோ? ஒரு தடடில எண்ணெய் தினுசில் நாலு சோ, பவுடர், ஸ்னோ. சுவரோடு சுவராய் ஒட்டினாற்போலிருந்த் ஒரு கதவைத் திறந்ததும் குபிரென பினாயில் நெடி முகத்தி லடித்தது. ஒஹோ சட்டென மூடினாள். இப்போகால மெல்லாம் காலலம்பறதிலிருந்து தலைக்கு விட்டுக்கறது.வர்ை, கைக்கெட்டற தூரத்தில் இருப்பதுதானே பாஷன் ராமா, ராமா, அங்கு பத்து நாள் வந்து தங்கற அம்பியாவே இல்லையே ஒரே ஊழலாயிருக்கே ஆனால் அவாளையும் சொல்லிக் குத்தமில்லை. பிரும்மச்சாரிக் கட்டை, காலா காலத்தில் கால்கட்டுப் போடும்வரை கலைச்சுப் போடறதை எடுத்துவைக்க அம்மா. இதெல்லாம் ஒழுங்குபடுத்தி காணப் போறோமான்னு நினைக்கறப்பவே தலையைச் சுத்தறது, முருகா! "கூப்பிட்டீங்களாம்மா? இதோ இருக்கேன். என்ன வேணும்? அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அட நீயும் முருகனா?” - "ஆமாம். நான்தாம்மா முருகன், நீங்க குரல் கொடுத்தா எங்கிருந்தாலும் வந்துடுவேன். இங்கேதான் சுத்திக்கிட்டு இருப்பேன். இப்ப என்ன வேணும்? சூடா நாயர் கடையி லேந்து இட்லி, காபி, பன்.தனியா கிளாஸ்லே தக்காளி சாம் பார். நல்லாயிருக்கும் அங்கே. காலையிலே குளிக்க வெந்நியா? தண்ணியா? வெந்நி ஒரு பக்கெட் எட்டணா, சூடா நானே போடுவேன், குமாரய்யா என்கிட்ட பெசலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/83&oldid=870460" இலிருந்து மீள்விக்கப்பட்டது