பக்கம்:மீனோட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 Ga7L-6 டோரம் கோடைவாய் காய்ந்து இருந்தது. “பெட்டியும் கூடையுமா ஒரு புதுப் பேரம் இறங்கிச்சு. கூடப் போய் கொண்டு வெச்சா ஒரு கால் ரூபா கிடைக்கும் அவசரம். மறந்து போச்சு. நெனப்பு வந்தப்போ நேரமா யிடுச்சு. ஆயா பானையைத் தூக்கிட்டா’. 'சரி, சரி, வெந்நீரைப் போடு.” “இன்னிக்கு வெந்நீரில்லேம்மா.” “என்னடா வந்தவுடனே ஆனை பூனைன்னே. இப்போ வெந்நீரில்லேங்கறே?” அவனிடம் துளிக்கூடப் பதட்டமே இல்லை. நான் என்ன செய்ய? முதலாளி கரி வாங்கிப் போடல்லே. பத்த வைக்க எதிர் வீட்டில் எப்பவும் கங்கு வாங்கிப்போம். அவங்க கதவைப் பூட்டிக்கிட்டு எங்கேயோ ஊருக்குப் போயிட்டாங்க.” “அதனால எங்களுக்கு வெந்நீருக்கு அஸ்தமிச்சு போச் சாக்கும்! நீ கெட்டிக்காரன்தான். கையாலாகாட்டாலும் எல்லாத்துக்கும் பதில் சொல்லி வாயாலே இட்டு ரொப்பம்ே. என்ன திருதிருன்னு முழிக்கிறே? இங்கே பால் கிடைக்குமா?” 'பால் என்ன? காபி, டி, பன்-' 'தக்காளி சாம்பார்”-என அவள் முடித்தாள். அவ ளுக்குச் சற்று அலுப்பாய்த்தானிருந்தது. சரி, நீ இடத்தைக் காட்டு போறும். நான் வாங்கிக்கறேன்.” . பாலுக்குத் தோஷமில்லே. கொண்டு வந்திருக்கற சுட்ட சப்பாத்தியை வெச்சிண்டு இன்னிப் பொழுதை ஒட்டலாம். நாளைக்கு அவுல்லே தண்ணி தெளிச்சு, ராத்திரி ஏதாவது பழம். அப்புறம் சுமங்கலிக்குத் தோஷமில்லே. 'இன்னிக்கு நீங்க குளியல் இல்லாமே மடி மாத்திக்க வேண்டியதுதான். வேணும்னா கூட இன்னும் நாலு காயத்ரி.” அவர் நெற்றிப் பொட்டை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண்டு நின்றார். சில சமயங்களில் அவர் அப்படித்தான் மசமசவென்று ஆயிடறார். அப்போது பஞ்சக்கச்சம் கட்டக்கூட அவள்தான் ஒத்தாசை செய்ய வேண்டியிருக்கு நின்னா நின்னபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/85&oldid=870462" இலிருந்து மீள்விக்கப்பட்டது