பக்கம்:மீனோட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மீனோட்டம் உட்கார்ந்தாள். அவள் மட்டுமல்ல, அவரும் முருகனை உன்னிப்பாய்க் கவனிப்பது தெரிந்தது. "தானும் அப்பப்போ கொடுப்பாரு. ட்ரவுஜரும், சொக் காயும் புதுசா எடுத்துத் தரேன்னு சொல்லியிருக்காரு. அவரு சொன்னாலே கிடைச்ச மாதிரிதான்.'-பையன் தன் பேச்சிலேயே உற்சாகம் அடைந்தான். டேய் முருவான்னா, கூப்பிட்ட குரலுக்குப் பக்கத்தில் நிக்கனும் உள்ளே வந்ததும் சொக்காயைக் கயட்டி அடிப்பாரு. கொடி யிலே மாட்டிக்கிட்டாலும் சரி, குறி தப்பி கீளே விளுந் தாலும் சரி, கொட்டின சில்லறையை கையாலே தொட மாட் டாரு. அது அப்பாலே முருவனுது. படா குவி. ஆனா டாம், தாட்யூட் என்னென்னவோ இங்கீஸ்-லே பொரிஞ்சு தள்ளு வாரு. ஏச ஏச எம்பாடு குசாலு, சில்லறை நிறைய கொட்டு ழில்லே!’’ “முருகா, நீ பெரிய ஆளுதான்.” "என்னம்மா செய்ய? திட்டினாலும், என் முதுவுலே டமாரம் கொட்டினாலும், ஒட்டிக்கவா போவுது? அதுவும் அந்த அம்மா வந்துட்டா அவருக்கு இன்னும் குஷி கூடிடும், அவங்க எதிரே என்னைக் கம்பியிலே இறைச்சியாட்டம் கோத்துத் திருப்பித் திருப்பி வாட்டுவாரு எனக்கென்ன? செவுத்தோரம் எலியாட்டம் பதுங்குவேன். ஆனால் ஒட மாட்டேன். ஒரு தபா அவங்க எதிரே பவுடர் டப்பாவை என்மேலே வீசி எறிஞ்சாரு பாருங்க...” 'அவங்க அவங்கன்னா எவங்கடா?” “அதாம்மா ஏசண்ட் ஐயா மவள். டப்பியை அடிச் சாரா? என் கறுப்பு மூஞ்சியிலே மாவு அப்பி வெள்ளை கோத்துக்கிட்டு நின்னேன். வாசனை என்னைத் தூக்குது. ரெண்டு பேருமா சிரிச்சு சிரிச்சி, என்னையும் சிரிப்பு தொத்தி டிச்சு. நான் சிரிக்க அவங்க சிரிக்க விலாவைப் புடிச்சிக் கிட்டு கட்டில்லே உருள்றாங்க. அப்புறம் அந்த அம்மாதான் என்ன குமார், உங்களுக்கு ஆனாலும் இவ்வளவு கோபம்’னு தன் மணிபர்சுலேருந்து ஒரு நோட்டை என் மேலே விசி எறிஞ்சாங்க. மொடமொடன்னு அஞ்சு ரூவா காயிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/89&oldid=870466" இலிருந்து மீள்விக்கப்பட்டது