பக்கம்:மீனோட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 39 மூஞ்சிலே விழுந்தா தோவுமா? நோவட்டுமே கண்ணுலே ஒத்திக்கிட்டு, நிஜார்ப் பையிலே சொருவிக்கிட்டேன். பாங்க் ஏசண்ட் மவளில்லே, எப்பவும் புத்தம் புதுசா நோட்டு. ஒரே மவ. விதவிதமா உடை, உடைக்கேத்த நடை. ஒடிச்சி ஒடிச்சி நடப்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும், இதென்ன இடுப்புப் பூட்டுக் கயண்டு போச்சா?” வெளியே கானலில், பக்கத்து, எதிர் வீடு, கடை கூரைகள், மொட்டை மாடிகள் நடுங்கின. - 'அந்த அம்மாவே, பெரிய தமாஸ் பேர்வழி, ஒரு வாட்டி திடீர்னு பாத்ரூமிலிருந்து குளிச்சிட்டு வராங்க பாருங்க, ஐயாவோட ாண்ட்டை மாட்டிக்கிட்டு ஐயாதானோன்னு அசந்துட்டேன், குமார். எனத்கு * இது நன்னாயிருக்கோ? அவங்களும் கிட்டக்கிட்ட ஐயா காதுக்கு வருவாங்க. திடீர் திடீர்னு என்ன கிசுமுசு’ பேசுவாங்களோ? என்ன சிரிப்பாங்களோ?” அவள் மண்டையுள் சுறில் சுறிலென இரு மின்னல்கள் வெட்டின. இரு மின்னலா? அல்லது ஒரு மின்னலே கொடி பிரிந்தா? வெற்றி நடுவுள் அதன் நீலப் பேரொளி மின்னி மறைகையில் மண்டை தீய்ந்தது. அவரை ஒரக்கண்ணால் திகிலுடன் நோக்கினாள். அவர் நெற்றிப் பொட்டை ஒற்றை விரலால் தேய்த்துக் கொண் டிருந்தார். திடீரென அவர் நெற்றியில் நாலு தண்டவாளங் கள் புடைத்து ஓடின. - ‘. . “ஒருநாள் ராத்ரி ஐயாவுக்குக் காத்திருந்து வாசற்படியி லேயே உறங்கிட்டேன். விலாவுலே பூட்ஸ்கால் செவுட்டி முளிச்சுகிட்டேன். ஐயாவும் அம்மாவும் நிக்கிறாங்க. நடு ராவா, விடிகாலையா எனக்குத் தூக்க மயக்கம் நிச்சயமா வல்லே. 'ழேய் முழுவா, நீ முழுவன்தானாடா? தொழைஞ்சு போச்சடா ஷாவி, மழு ஷாவி-’’’ 'நிறுத்து, நிறுத்து” எனக் கூவினாள். அவள் காதைப் பொத்திக் கொண்டாளாயினும் அவன் குரல் கிரக்கமற்று செவிப்பறையில் நகார் அடித்துக் கொண்டே இருந்தது. Gఇతణ్ణ துவிட்ட சொல் சட் ப்ரேக்கு கேட்கமா? 6 ستم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/90&oldid=870468" இலிருந்து மீள்விக்கப்பட்டது