பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

முதற் குலோத்துங்க சோழன்

இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரம சோழனுலாவிலும், கங்கைமாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்காரமேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம் இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப்பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத் திற்குக் கட்டப்பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கரவர்த்திகளின் பெருமையையுணர் தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலைபெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின்பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற்கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர்களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநிலமன்னர்களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரமும் பகையரசர்களால் முற்றி-