பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

31



பத்திரபாகு முனிவர்

இப்படிப் பரப்பியவர்களுள் பத்திரபாகு முனிவர் என்பவர்(கி.மு.317-297) மோரியப் பேரரசனான சந்திரகுப்தனின்(கி.மு. 322-298) குருவாக விளங்கினார் என வரலாறுகள் உரைக்கின்றன. "மகத நாட்டில் பெரியதோர் பஞ்சம் ஏற்படவிருந்ததை முன்னரே அறிந்த இம்முனிவர், தாம் தம்முடைய சீடர்கள் பன்னீராயிர வருடனும், அரசை துறந்து தம்மைத் தொடர்ந்துவந்த சந்திரகுப்தனுடனும், தென்னாடு நோக்கி வந்தனர். இன்றைய மைசூர் நாட்டில் விளங்கும் ‘சிரவண பெலகொள’ என்னுமிடத்தில் இவர்கள் தங்கினார்கள். இவ்விடத்திலே சந்திரகுப்தரும் இவரும் வீடுபேறு அடைந்தனர். இங்கிருந்த காலத்திலே, இவர், விசாக முனிவர் என்னும் தம் சீடர்களில் ஒருவரை, சோழ பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பிவரும்படியாக அனுப்பினர். அவர்தான் பாண்டி நாட்டிற்குச் சமண சமயத்தைக் கொணர்ந்து பரப்பியவர்” என்பார்கள்.

நேமிநாதர் காலத்தில்

‘நேமிநாதர்’ என்பவர் கண்ணபிரானின் காலத்திருந்த சமண தீர்த்தங்கரர் ஆவர். இவர் காலத்திலே தென்னாட்டிற்கு அகத்தியருடன் வந்த பதினெண்குடி வேளிர்களும் சமணர்களாகவே இருந்தனர். அவர்கள் அப்பொழுதே சமணத்தைப் பரப்பினார்கள் என்பார்கள் சிலர்.

வச்சிர நந்தி

ஆதியிலே சமணசங்கம் ஒன்றாக இருந்தது. பின் நான்காகப் பிரிந்தது. அவற்றில் நந்திகணம் என்பது ஒன்று. அதனைச் சேர்ந்தவர் இவர். இவர் கி.பி. 470 இல், மதுரையிலே சமணரின் திராவிடசங்கத்தை நிறுவினார் என்று சமணநூல்கள் குறிப்பிடுகின்றன.

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் சைவசமய குரவர் நால்வரில் ஒருவர். இவர் காலத்திலே மதுரையிற் சமண சமயம் பெரிதும் செல்வாக்குடன் விளங்கிய செய்தியைப் பெரிய புராணத்தினாலே காணலாம்.

‘சமணரின் செல்வாக்கைப் பாண்டியனிடத்திருந்தும் பாண்டிய நாட்டிலிருந்தும் அகற்றும் பொருட்டு ஞானசம்பந்தர்