பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

முத்தமிழ் மதுரை


மதுரைக்குச் சென்றார். பாண்டியனுக்கு வெப்புநோயை வரச்செய்தார். அதனைச் சமணரால் தீர்க்க முடியாமற்போக, முடிவில் தாமே நீறுபூசி அதனைத் தீர்த்து, அவனைச் சைவன் ஆக்கினார்.

“பின்னர் அரசனைத் தொடர்ந்து நாட்டு மக்களும் சைவர் ஆனார்கள். இஃதல்லாமலும், சமணரை வாதிலே தோல்வியுறச் செய்து கழுவேறச் செய்தும் வெற்றி கொண்டார் ஞான சம்பந்தர். சமணரின் பாழிகளும் பள்ளிகளும் தகர்த்து அழிக்கப்பட்டன.” இவ்வாறெல்லாம் சமணத்தின் செல்வாக்கினை ஞானசம்பந்தர் போக்கிய செய்தியைப் பெரிய புராணம் விரிவாகக் கூறுகிறது.

எண்ணாயிரம் சமணர்

மதுரையைச் சூழ எட்டு மலைகள் இருந்தன. அவற்றில் எண்ணாயிரம் சமணத் துறவியர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே கழுவேறினார்கள். இதனை, ‘எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்’ என்று பெரிய புராணம் கூறுகின்றது.

எட்டு மலைகள்

சமணர் வாழ்ந்ததாகக் கூறப்படும் எட்டு மலைகள், பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை) என்பனவும், ஒருவகம், பப்பாரம் பள்ளி, அருங்குன்றம், பேராந்தை, யானை என்பனவும் ஆகும்.

யானைமலை

இது மதுரைக்குக் கிழக்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. முன்னர்ச் சமணர் வாழிடமாக இருந்த இது, இப்போது, நரசிங்கப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது.

நாகமலை

இதுவும் மதுரைக்கு அருகிலே இருப்பதான ஒரு மலைதான். இங்கும் சமணர்கள் பேரளவில் இருந்திருக்கின்றனர்.

இருங்குன்றம்

இப்போது ‘அழகர்மலை’ என வழங்கும் திருமாலிருஞ் சோலைமலை இதுவே. இது, முருகன் கோயில் கொண்டிருக்கும் இடமாக இருந்து, சமணர் வாழிடமாக விளங்கி, இப்போது