பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G3

வசித்த இடத்தில் மாதா கோயிலும் மடங்களும் எழுந்தன. பாதிரிமார்கள் பெருகினர்.

அருள் தந்தை செர்ஜியஸின் கைபட்டால் போதும்; தீராத நோய்கள் பலவும் தீர்ந்து போகும் எனும் நம்பிக்கை மக்களிடம் உண்டாயிற்று. அவர் தொட்ட தளுல் அநேகருக்கு நோய் தீர்ந்தது. அவர் புனிதர்; புண்ணியர்; பூஜிக்கத் தகுந்தவர் என்று எல்லோரும் போற்றினர்கள். மதமும் மதவாதிகளும் இவரை நன்கு பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டு வளர்ந்தது. அது அவருக்கு வேதனை அளித்தது. ஆயினும் வேறு வழியில்லை.

இந்த விதமாகப் பல வருஷங்கள் ஓடிவிட்டன. ஒரு வசந்த காலம். புனிதர் செர்ஜியஸ் அடிக்கடி எண்ணு வது உண்டு: நான் தெளிந்த நீரூற்ருக இருந்தேன். அவள் ஆசைகாட்டி மயக்க வந்தாள். நீரூற்றின் புனி தம் அவளேயும் புனிதமானவளாக மாற்றிவிட்டது. காலப்போக்கில், ஊற்றில் தூயநீர் ஊறுவதற்குள் ளாகவே, கும்பல் நெருக்கியடித்து முண்டுகிறது. குடிப்பதற்காகப் பாய்கிறது. ஊற்றையே சேற்றுக் குட்டையாக மாற்றிவிடுகிறது. இப்போது சேறுதான் மிஞ்சி நிற்கிறது!’

ஒருநாள் வியாபாரி ஒருவன் தன் மகளை அழைத்து வந்தான். அன்று பெரும் கும்பல். சாமியார் தனது களைப்பையும் கடும் உழைப்பையும் பெரிது படுத்தாது மக்களுக்கு சேவை செய்தார். புனித ஞானிகள் அன வரும் இவ்வாறே பணியாற்றினர் என்று தற்பெருமை யோடு எண்ணும் சுபாவம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

வியாபாரி அவர் நலனில் அக்கறை உடையவன் போல் கும்பலை விரட்டித் துரத்தினன். ஸெர்ஜியஸ்