பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அப்பாவும் பையன்களும் பகலில் ஆகாய வீதியில் உலா வருவது வழக்கம். அம்மாவும் பெண்களும் இரவு நேரத்தில் வானவெளியில் திரிவது உண்டு. -

குழந்தைகள் எல்லாருமே போக்கிரிகள் தான். பூமியில் உள்ளவர்களுக்குப் பெரும் தொல்லைகளாக விளங்கினர். பூமியின் மக்கள் உஷ்ணத்தால் அவதிப் படும்படி பையன்கள் தொந்தரவு கொடுத்தனர். இரவில் குளிரால் நடுங்கும்படி பெண்கள் படுத்தினர்.

ஆகவே, ஒருநாள், பூமியில் வசிக்கும் ஜனங்கள் எல்லோரும் ஒன்றுகூடி, சூரியனையும் அம்புலியையும் நோக்கி முறையிட்டார்கள். உங்கள் குழந்தைகளை அடக்கி ஒடுக்குங்கள். பகலும் இராவும் எந்நேரமும் அவர்கள் எங்களுக்குத் தொல்லை தருகிருர்கள். எங்களுக்கு அமைதி என்பதே இல்லாமல் பண்ணு கிருச்கள். எங்கன் சாப்பாட்டைக் கூட நாங்கள் அமைதியோடு சாப்பிடமுடியவில்லை’ என்ருர்கள்.

இதைக் கேட்டதும் சூரியனும் அம்புலியும் மிகுந்த கோபம் கொண்டனர். தங்கள் குழந்தைகள் பேரில் தான்.

"இப்படி மனிதருக்குத் துன்பமும் தொல்லேயும் தரு கிருர்கள் என்ருல், என் குழந்தைகள் இல்லாமலே தொலேயட்டும். என் மகள்களை எல்லாம் நான் விழுங்கி விடுகிறேன். உன் பையன்களை நீ விழுங்கி விடு: என்று அம்புலி சொன்னுள்.

. சூரியன் அவள் பேச்சைக் கேட்டு, ஆண்களின் சுபாவம் எப்படியோ அப்படியே-பெண்களின் வஞ்ச கத்தை நினைக்கவும் செய்யாமல்-உடனடியாகச் செய்ல்