பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 8 இடம் : பல்கலைக் கழகம், மரநிழல் நேரம் : L) (} ) உறுப்பினர்: நம்பி, வீனா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெரிய ஏரி. அதை இரண்டாகப் பிளந்து செல்கிறது ஒரு பாதை. அப்பாதையின் இருமருங்கிலும் வரிசையாகக் கொன்றை மரங்களும், புன்கு மரங்களும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஏரிக்கரை யோரமாகப் போடப்பட்டிருக்கும் இருக்கையில் நம்பியும் வீணாவும் அமர்ந்திருக்கின்றனர். வீணாகையில் உள்ள சிறுகற்களை ஒவ்வொன்றாக ஏரிநீருக்குள் போட்டு, அது உண்டாக்கும் வட்டங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நம்பி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான். நம்பி: என்ன வீணா! ஆழ்ந்த அமைதியில் அகப்பட்டிருக்கிறாய்! வீணா: என் உள்ளம் அருவியாற்றங்கரையில் அலைந்து கொண்டிருக்கிறது. நம்பி: அருவி யாறா? வீணா: ஆமாம்? ஈழத்தில் மன்னார் மாவட்டத்தில் இருக்கிறது. அதன் கரையில் தான் எங்கள் வீடு அங்குதான் - என் பெற்றோர்கள் வாழ்கிறார்கள். கவிஞர் முருகுசுந்தரம் 112