பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டப் பந்தயங்களை ஒழுங்காக வென்றவர் எவருமில்லை. அன்று அர் கொனாட்ஸ் ஆனை முகப் பிள்ளையார். இன்று - கெளதமன். குறுக்கு வழியில் வென்ற இந்தப் பெருந்தாடிப் பென் ஜான்சனைத் தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் துணிச்சலில்லை. தந்தை தாரை வார்க்கத் தலைநிமிர்ந்த கோலமயில் எதிரில், தலைவிரித்துக் குலை சரிந்த ஈந்தாகச் சடா முடியோடு தாடிக் கெளதமன். அவள் அடிமனத்தில் அவிழ்க்க முடியாத அநேக முடிச்சுகள்! 3. ஆரண்ய காண்டம் சுவர்க் கோழிகளின் ஒசையைத் தவிர வேறு எதுவும் கேட்காத அடக்கமான அமைதி. ஒதுக்கக் கைநீட்டும் அடர்த்தியான கருக்கிருட்டு. முருகுசுந்தரம் கவிதைகள் 23