பக்கம்:மொழியைப் பற்றி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 77

தாய்மொழி மீது உண்மையான பற்று இல்லாதவனிடம் நாட்டுப் பற்று இருக்கும் என்று நினைப்பதற்கே இடமில்லை.

- கான்சுடான்டின் பாசுடோவஃகி

மொழி என்பது மக்களின் வரலாறு. அது தான்் நாகரிகத்திற் கும் கலாசாரத்திற்கும் வழிகாட்டி. அதனால் தான்் உருசிய மொழியைக் கற்பதும், அதனைப் பாதுகாப்பதும் மிகமிக அவசியமாகும்.

- அலெக்சாண்டர் குப்ரின்

உருசிய மொழி உலக மொழியாக மலரவேண்டும். அந்த நேரம் வரும். வெகு விரைவாக வரும். உலகம் முழுவதும் உருசிய மொழி கற்கப்படும்.

- ஏ. என். தால்சுதோய்

உருசிய மொழி என்பது இலெனினின் மொழி.

- மிகேல் காலினின்

உருசிய மொழிக்கு நன்றி கூறுவோம்! விதவிதமான தேசிய இலக்கிய வாணர்களான நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். உருசிய மொழியின் மூலம், உருசிய நூல்களின் மூலம் நாம் இலக்கிய வளத்தைப் பெற்றிட முடிந்தது. நம் நாட்டில் ஓர் எழுத்தாளன் உருசிய மொழியில் எழுதிய நூல் ஒன்றினை வெளியிடுகிறோம் என்றால், அந்த நூல் பரவலாகப் பல்வேறு இடங்களில் பலரால் படிக்கப்படுகிறது.

- யூரி இரிட்தியூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/79&oldid=713876" இலிருந்து மீள்விக்கப்பட்டது