பக்கம்:ரமண மகரிஷி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. நரகத்திலே சொர்க்கம் தேடினார்!

ரயில் வண்டியிலே அமர்ந்திருந்த சிறுவன் வெங்கட்ராமன், திருவண்ணாமலை எப்போது வரும் என்று எதிர்பார்த்தவாறே ஆடி அசைந்து பயணம் செய்து கொண்டே இருந்தான். ஒவ்வொரு ரயில் நிலையப் பெயர்ப்பலகையையும் கவனமாகப் படித்துக்கொண்டே போனான்.

1896-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளன்று அதிகாலை நேரத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வண்டி வந்து நின்றது. வெங்கட்ராமன் வண்டியை விட்டுக் குதித்தான். அப்போது அண்ணாமலைக் காற்று சில்லென்று அவன் உடல் மீது படர்ந்தது. அதற்குள் அன்றைய இரவு இருள்-சிறிது சிறிதாகச் சிறுத்து ஞான விடியல் ஒளி பெருத்துப் பரவிக் கொண்டே ஒளிர்ந்தது. அருணாசலேசுவரர் கோயில் திருவண்ணாமலையில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை வெங்கட்ராமன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான்.

இரயில் நிலையத்தில் நின்றபடியே, சிலிர்த்த உள்ளத்தோடு தன்னை மறந்து வெங்கட்ராமன், இரு கை கூப்பி கோபுர தரிசனம் கண்டு வணங்கினான். கோபுரம் உள்ள இடத்துக்கு அவன் விரைந்தோடி வந்தான் அப்போது அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை! ஆலயத்தின் கதவுகள் மூடிக்கிடந்தன.

திருக்கோயில் சுற்றுச் சுவர்களைச் சிலர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால், வழக்கமாகத் திறக்கப்படும் நேரத்திற்கு முன்னாலேயே கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/43&oldid=1280698" இலிருந்து மீள்விக்கப்பட்டது