பக்கம்:ரமண மகரிஷி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ரமண மகரிஷி


திறந்தும் பதில் சொல்லவில்லை. பிறகு, அந்தப் பெண் திரும்பிப் போவதற்கு முன்பு ஒரு துணியை பால சந்நியாசி அருகே வைத்து விட்டு, தேவையானால் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று சென்று விட்டார்.

வழக்கம் போல கோயில் குறும்புப் பையன்கள் குழுவாக வந்தார்கள். ஏளனம், கிண்டல், கல்லடி, மண்ணடிகள் எல்லாம் நடந்தன. அதை அவ்வழியாகச் சென்ற வெங்கடாசல முதலியார் என்பவர் பார்த்து விட்டு, ஐயோ ஒரு இளம் துறவி அல்லவா அங்கே தவம் செய்கிறார்? அவர்மீது குறும்பர்கள் கற்களை எறிகிறார்களே என்று பயந்து அவர்களை விரட்டியடித்தார். முதலியார் அந்த பாலயோகியைக் காண இருட்டறைக்குள் நுழைந்தார். அப்போது எதரிலே ஒரு சாமியார் வந்தார்.

காயம் ஏதாவது பட்டதா சாமி? என்று முதலியார் அவரைக் கேட்டார்.

எனக்கு எந்தலிதக் காயமும் ஏற்படவில்லை. உள்ளே சின்ன சாமியார் இருக்கிறார். அவருக்கு ஏதாவது காயம் பட்டதோ, என்னவோ போய் விசாரியுங்கள் என்று சொல்லிவிட்டு எதிரே வந்த சாமி போய் விட்டார்.

வெங்கடாசல முதலியார் சின்னசாமி இருக்கும் பாதாள அறைக்குள் போனார். இருட்டல்லவா? ஒன்றும் தெரியவில்லை அவர் பார்வைக்கு. பிறகு இருள் கலக்கத்தில் ஒரு மனிதனுடைய உருவம் தெரிந்தது முதலியார் வெளியே வந்தார்.

மண்டபத்தின் மேற்கே ஒரு தோட்டம், பழனிச் சாமி என்ற ஒரு சந்நியாசி தனது சில சீடர்களோடு அங்கே தங்கி வந்தார். வெங்கடாசல முதலியார் அந்தச் சாமியார், சீடர்களது உதவிகளோடு மீண்டும் பாதாள அறைக்குள் நுழைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/50&oldid=1280719" இலிருந்து மீள்விக்கப்பட்டது