பக்கம்:ரமண மகரிஷி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13. இரமண மகரிஷியின்
போதனைகள்!


ருளாளர் ரமண மகரிஷியின் ஆன்ம போதனைகளையும் புன்முறுவலையும் நெருக்கமாகக் கேட்டுப் பழகியவர்களில் பெரும்பாலோர், அவருக்குரிய ஞான குருகுல மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். பூசாரி பழனிசாமியாரைப் போல துறவுத் தொண்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதே போல பல அடியவர்கள் ரமணாஸ்ரமத்தில் தங்கி அடிக்கடி ஞானோபதேசங்களையும் கேட்டு அவர்களும் வழிகாட்டிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு வழிகாட்டியாக வாழ்ந்த ஓர் அடியார் குறித்து வைத்த போதனைகளே கீழ்க்கண்ட உபதேச மொழிகள்.

தீமைகளுக்குக் காரணம் கர்மாவா?

வட இந்தியாவிலே இருந்து ரமணா ஸ்ரமத்துக்கு ஒருவர் வந்தார். அவர் பாட்னா நகர்வாசி. அவர் அருணாசலம் வந்தபோது சில யோகிகளின் வம்படி வழக்குகளிலே சிக்கி சீற்றத்துடன் மகானைக் காண வந்தார். அந்தக் கோபத்தோடு அவர் ரமணரிடம் வாதித்த சம்பவம் இது.

உலகத்தில் ஏன் அதிகமாக தீமைகள் வளர்ந்து வருகின்றன? நல்லவர்களை விட தீயவர்கள் எல்லா வகையிலும் சுகமாக வாழ்கிறார்களே ஏன்? இவற்றுக்கெல்லாம் காரணம் எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/80&oldid=1281241" இலிருந்து மீள்விக்கப்பட்டது