பக்கம்:ராஜாம்பாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இராஜாம்பாள்

மணவாள நாயுடு சரி, சரி! முதலிலேயே இப்படி: சொல்லியிருந்தால் இப்படிப் பேசியே இருக்கமாட் டேனே. திருவல்லிக்கேணி கோவிந்தன் வந்திருந்தால் புரட்டி விடுவானென்று பேதை ஜனங்கள் சொல்வது வ்ழக்கமாயிற்றே. இந்தக் கேசில் அந்தக் கெட்டிக்காரக் கோவிந்தனுக்கு யார் மூக்குக்கும் எட்டாத விசேஷ வாசன ஒன்றும் அகப்படவில்லேபோல் இருக்கிறது. இன்ஸ்பெக்டர் ஏமாந்தவனுயிருந்தால் கோவிந்தனுக்கு வாசனை தெரியும். பழம் பெருச்சாளியாகிய மணவாள நாயுடுவிடம் கோவிந்தன் ஜபஞ் சாயுமா?

கோவிந்தன்: வாய்ப்பேச்சுப் பேசுவதால் வரும் பயன் என்ன? கெட்டிக்காரராயிருந்தால் நடத்திக்காட்டு வார்கள். தங்களுக்கு ஸ்டேஷனில் அதிக வேலை இருக் குமே. அந்த வேலைகளே விட்டுவிட்டு வீண்பேச்சுப் பேசுவதில் வரும் பயனென்ன? உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன். துரைசாமி ஐயங்காரவர்களே! கோபா லனே அடைத்திருக்கும் இடத்திற்கு என்னைத் தயவுசெய்து கூட்டிக்கொண்டு போங்கள். -

துரைசாமி ஐயங்கார்: கோவிந்தா, மணவாள நாயுடு சொன்ன சங்கதிகளை யெல்லாங் கேட்டாயே! கோபால னைக் குறித்து உன் வாஸ்தவமான அபிப்பிராயம் என்ன? உண்மையாய்ச் சொல். -

கோவிந்தன்: நான் கோபாலனைப் பார்த்துப் பேசின. பிற்பாடே அவன் குற்றவாளியென்றும், அல்லவென்றுஞ்: சொல்ல முடியும். -

8. கோவிந்தனும் கோபாலனும் - கோவிந்தன்: கோபாலன் என்ன இதுவரையிற். பார்த்திராததால் அவனுக்கு என்னே அடையாளந் தெரியாது. ஆகையால் நாம் கோபாலனைச் சந்தித்த வுடனே ராஜாம்பாளைக் கொலை செய்தவனைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதற்காக வந்திருக்கும் திருவல்லிக் கேனித் துப்பறியும் கோவிந்தனென்று அவனிடம் தாங்கள் சொல்லவேண்டும். அப்பால் நடக்கவேண்டிய சங்கதிகளே தான் பார்த்துக்கொள்ளுகிறேன். , ‘s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/86&oldid=684628" இலிருந்து மீள்விக்கப்பட்டது