பக்கம்:ராஜாம்பாள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனும் கோபாலனும் 85

லும் கொஞ்சமாவது ஒளிக்காமற் சொல்லவேண்டும்; வக்கீல்களிடத்திலும் வைத்தியர்களிடத்திலும் உள்ளதை உள்ளபடி சொல்லாமல் ஒளித்தால் அதனுல் கெடுதல்கள் நேரிடுமேயல்லது நன்மை வராது. இப்பேர்ப் பட்ட கஷ்டமான விஷயங்களைக் கண்டுபிடிப்பது வருத்த மாகையால் உள்ளதை உள்ளபடி ஒளியாமல் நீ சொல் வதாயிருந்தால் மட்டும் ராஜாம்பாளைக் கொலைசெய்த பாதகனைக் கண்டுபிடிக்க என்னுல் முடியும்; பெண்கள் விஷயமாயிற்றே, நாம் எப்படிச் சொல்வது என்ற எண் னம் கொண்டாயாளுல் நான் இக் காரியத்திற் பிரவேசிப் பதால் உபகாரமில்லாமற் போவதுமன்றி என்னுல் கண்டு பிடிக்க முடியவில்லை என்ற கேவலமும் எனக்கு ஏற். படுமாகையால் உன் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லா மல் நடந்த விஷயங்களே ஒளிக்காமற் சொல். -

கோபாலன்: ஒரு பெண் விஷயந்தவிர மற்றதை யெல்லாம் நான் சொல்வதில் தடையில்லை.

கோவிந்தன் துரைசாமி ஐயங்காரவர்களே. இதைக் கண்டுபிடிக்க என்னுல் முடியாதாகையால் உத்தரவு கொடுத்தால் நான் சென்னைக்குப் போகிறேன். இவ்வளவு நேரம் நான் ஒன்றும் ஒளிக்காமற் சொல்லவேண்டு மென்று சொல்லியும், கோபாலன் ஒரு பெண் விஷயம் தவிர மற்றதை யெல்லாம் சொல்லுகிறேனென்று சொல்வதால் வாஸ்தவத்தில் இப்போது எந்தப் பெண் விஷயம் சொல்லமாட்டேன் என்கிருளுே அந்தப் பெண் விஷயத்தில் இருக்கப்பட்ட அபிமானம் கோபால னுக்கு ராஜாம்பாள் பேரில் இருக்கவில்லையென்று தோன்றுகிறது. ஏனென்றால், ராஜாம்பாளைக் கொலே செய்த பாதகனைக் கண்டுபிடிக்கக்கூட இன்னொரு பெண் ணின் ரகசியஞ் சொல்லமாட்டேனென்றால் அப்போது அவளிடத்தில் எவ்வளவு அபிமானம் இருக்கவேண்டு மென்று தாங்களே யோசித்துக்கொள்ளலாம். -

கோபாலன்: தாங்கள் சொல்லுவது சரியல்ல; ராஜாம்பாளைப் பார்க்கிலும் அபிமானமான வஸ்து எனக்கு உலகத்திலேயே கிடையாது. அதற்கும் இதற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாதாகையால் அநாவசிய மாய் ஒரு பெண்ணின் ரகசியத்தை ஏன் வெளிப்படுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/89&oldid=684631" இலிருந்து மீள்விக்கப்பட்டது