பக்கம்:ராஜாம்பாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இராஜாம்பாள்

தாங்கள் இப்போது வந்துவிட்டதால் இப்போதே தான் கள் கண்டுபிடித்ததாக எண்ணிக்கொண்டு இனி நான் ச; தோஷமாய் இருப்பேன். நான்தான் கொலைசெய்தேன் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு சொல்லுகிருனே; அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக் கிறதுபோல் இருக்கிறது. என்னைக் கல்யாணஞ் செய்வதாய் வாக்களித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யச்சொல்லிய படி செய்துவிட்டு அவளே இரண்டு மணிக்கு உலகளந்த பெருமாள்கோவில் தெருவிற்கு வரச்சொல்லி நான் எழுதி இருந்தேனே, அதுதான் அந்த மடையனுக்கு நான் கொன்றேனென்பதற்கு முதல் சாட்சியாம். பிரிப்த்தோடு கல்யாணஞ் செய்துகொள்ளுகிறேனென்று வந்தவளை நான் கொலைசெய்தேன் என்கிருனே! அவனுக்குப் புத்தி இருந்தால் அப்படிச் சொல்லுவான? அவளே நான் கொலை செய்திருந்தால், அவ்விடத்திலேயே நான் இருப் பேன? ஏன் இந்தப் புத்திகூட அவனுக்கு இல்லாமற் போயிற்றென்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் கொல்ைசெய்த பாதகனைக் கண்டுபிடிக்கும் வரையில் வேறு வேலை செய்வதில்லையென்று எனக்கு வாக்குக் கொடுங் கள்’ என்றான்.

கோவிந்தன். உன்னை நான் இதுவரையில் பார்த் திராதபோதிலும் உன்னுடைய குணாதிசயங்களைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கொலை நீ செய்ய வில்லை என்று நான் நிச்சயமாய்ச் சொல்லுவேன். ஆனல் யார் செய்தார்களென்று நான் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் உனக்கு இருந்தால், இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னலிருந்து நீ என்ன என்ன செய்தா யென்றும் யாராருடன் பேசிளுயென்றும் ஒன்றும் ஒளிக் காமல் என்னிடம் சொல்ல வேண்டும். இதற்குச் சம் பந்தப்படாத விஷயங்களை நாம் ஏன் சொல்ல வேண்டுமென்று நீ நினைத்துக்கொண்டு சொல்லாமல். இருக்கக்கூடாது. இதில் சம்பந்தப்படாத விஷயங்க ளென்று உனக்குத் தோற்றும் சங்கதிகளே ஒருக்ால் இதற்குக் காரணமாய் இருக்குமாதலால் எவ்வளவு ரகசிய மான விஷயமாயிருந்தாலும், உனக்கு அத்தியந்த நேயர்களாகிய ஆண் அல்லது பெண்ணைக் குறித்திருந்தா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/88&oldid=684630" இலிருந்து மீள்விக்கப்பட்டது