பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தன . அப்படியானால் உம்முடைய மூளையில் அழுக்குப் படிந்திருக்கிறது. அதை வண்ணானுக்குப் போட வேண்டியது தான் சரியான சிகிச்சை இன்னொரு முறை எஜமானரிடம் போய் இந்த மடமைக்கு மருந்தை அறிந்து வாரும். ஸோமே (மாதவராயரிடம் போப் ஸ்வாமி தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்? மாத இவை என்ன கேள்விகள்? உமக்கு என்ன பைத்தி யம் பிடித்துவிட்டத்ா? பட்டினத்தைக் காப்பது சேனை என்பது கூட உனக்குத் தெரியாதா? ஸோமே : (திரும்பி வந்து) தனபாலா பட்டினத்தைச் சேனை காக்கிறது என்பது கூடத் தெரியாதா? முட்டாள். இதெல் லாம் என்ன கேள்வி: யார் வந்திருப்பவர் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. பைத்தியக்காரனைப் போல் ஏதேதோ உளறுகி றாயே! நான் கேட்டதற்கு நீ சொன்னதற்கும் மொட்டைத் தலைக் கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தாராளமாய் இருக்கிறது. தன ஐயோ பாவம் புத்திக்கு எட்டவில்லை! மிகவும் உயரம் போல் இருக்கிறது! ஒரு ஏணியாவது வைத்து ஏறிப் பார்க்கக் கூடாதா அதற்கு இவ்வளவு பீடிகை எதற்காக? எஜமான ரிடம் போய்த் தெரிவிக்கிறேன். /போகிறான்) ஸ்வாமி கடன் காரி வந்துவிட்டாள்! - மாத எனக்குக் கடன்காரி யார் இருக்கிறாள்? ஸோமே ! பலே! நன்றாய் இருக்கிறதே! நீங்கள் கொடுக்க வேண்டிய கடனை இதற்குள் மறந்து விட்டீர்களே வஸந்த ஸேனைக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது நினைவிற்கு வர வில்லையா? மாத என்ன விளையாடுகிறாயோ? ஸோமே ; இல்லை இல்லை; நிஜமே. இதோ தனபாலன் வந்திருக்கிறான். வேண்டுமானால் அவனைக் கேளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/108&oldid=887322" இலிருந்து மீள்விக்கப்பட்டது