பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வஸ் அவ்விதம் சொல்ல எனக்குத் துணிவு எப்படி உண் ட்ாகும்? தோழி : சந்தர்ப்பத்தில் தைரியம் தானாக ஏற்படும். (வளிவந்தஸேனை நாணத்துடன் மாதவராயரிடம் நெருங்கிப் புஷ்பங்களை அவர் பேரில் விசிறி) ஸ்வாமி! நமஸ்காரம்! மாத ஆகா வஸந்தஸேனா வரவேண்டும் வரவேண்டும்! இந்த தினம் ஸுதினம் ஒரு நாளும் கிடைக்காத கெளரவம் இன்று கிடைத்ததல்லவா! வஸ் : இந்த உபசார வார்த்தைகள் என் வாயில் இருந்தல் லவோ வர வேண்டியவை! லோமே (மாதவராயரிடம் தனிமையில்) நண்பரே வந்த காரணமென்ன என்பதை விசாரிக்கட்டுமா! மாத மரியாதையாகக் கேள்! ஸோமே : வஸந்தஸேனா சகல சுக போகங்களும் நிறைந்த உன்னுடைய மாளிகையை விட்டு இவ்வளவு தூரம் வரும்படி யான சிரமத்தை ஏற்றுக் கொண்ட காரணமென்ன? தோழி (ஸோமேசனிடம்/ ஐயா! நீர் கொடுத்த வைரசரத் தின் கிரயம் எவ்வளவு என்று அறிந்து கொள்ள எஜமானி அம்மாள் விரும்புகிறார்கள். - ஸோமே. (மாதவராயரிடம் தனிமையில்/நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா! சரியாய்ப் போய்விட்டது பார்த்தீர்களா? தோழி : அதைக் கேட்பதின் காரணம் என்ன என்றால், அவர்கள் அதை சூதாட்டத்தில் தோற்று விட்டார்கள். ஆகை யால் அதன் விலையை அறிந்து கொள்ள விரும்புகிறார். ஸோமே : (தனக்குள் ஒகோ பதிலுக்குப் பதிலோ தோழி : இழந்த சரத்திற்குப் பதிலாக இவ்வாபரணங்களை வைத்துக் கொள்ளுங்கள் (திருட்டுப் போன நகைகளைக் கொடுக்க, ஸோமேசன் ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/110&oldid=887327" இலிருந்து மீள்விக்கப்பட்டது