பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் யும் வேண்டாமென்று நான் சொல்ல வேண்டி இருப்பதைப் பற்றிப் பெரிதும் வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும். வஸ் பிரபோ பிறர் காலில் கேவலம் ஒரு முள் தைப் பதைக் கண்டு பொறாமல் வருந்தி இளகும் தங்களுடைய தயாள மானது என் விஷயத்தில் மாத்திரம் ஏன் இரக்கம் கொள்ள வில்லை? இது என் அதிர்ஷ்ட ஹீனமோ? ஏன் என்னிடத்தில் தங்களுக்கு இவ்வளவு விருப்பமின்மை என்னிடத்தில் யாதாயி னும் குற்றம் குறைபாடுகளைக் கண்டீர்களோ? நான் கற்பில் தவறி நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களோ? எங்கும் நிறைந்திருக்கும் ஸர்வேசுவரன் ஸாrயாகச் சொல்லுகிறேன். நான் அறிவு பெற்ற முதல் இதுவரையில் தங்களை அன்றி பிற புருஷரை மனதினால் நினைத்ததும் இல்லை; வாயால் குறித்த தும் இல்லை; தேகத்தால் பரிசித்ததும் இல்லை; இது உறுதி! இது சத்தியம்! தாங்களே எனக்கு நாதன், தாய், தந்தை; நண்பர்; உறவினர் முதலிய யாவரும் தாங்களே! நான் தொழும் கடவுளும் தாங்களே இந்தப் பிறப்பில் நான் தங்களை அன்றி வேறு எவரையும் விரும்பேன். தங்கள் மேற்கொண்ட ஆசையென் னும் தீயால் கருகித்துவளும் எனக்கு உயிர்ப் பிrை கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். தருமப் பிரபோ! மாத ஆகா என்ன செய்வேன்? ஈசுவரா இதென்ன என்னை இவ்விதமான தரும சங்கடத்தில் வைத்துச் சோதனை செய்கி றாய்? ஹே! மங்கையர்க்கரசி வருந்த வேண்டாம். உன்னிடத் தில் ஏதோ களங்கம் இருக்கிறதென்று நினைத்து உன்னை மறுக்கவில்லை. உன்னைப் போன்ற உத்தமியை அடைவதை அரசர்களும் கிட்டாத பாக்கியமாக மதிப்பார்களே! அப்படி இருக்க நான் வேண்டாமென்று சொல்வேனோ! வஸ் : அப்படியானால் உயர் குலத் துதித்தோராகிய அந்தணர் கேவலம் தாழ்ந்த வகுப்பிற்குரிய என்னை அங்கீகரிப்பது தவறு என்று மதிக்கிறீர்களோ? மாத பெண்மணி! அப்படியல்ல கடவுளால் படைக்கப்பட்ட யாவரும் சமமானவர்களே உயர் குலத்தினரிடத்திலும், பறைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/116&oldid=887338" இலிருந்து மீள்விக்கப்பட்டது