பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சந்தா ஏன் சோதனை செய்ய வேண்டும்? வீர என்ன நம்பிக்கையின் பேரில் விடுகிறது? சந்தா மாதவராயருடைய யோக்கியதையே போதுமான நம்பிக்கையல்லவோ அவர் சம்பந்தப்படும் விஷயத்தில் சந்தேகப்படலாமோ? வீர மாதவராயராவது, வஸந்தஸேனையாவது நல்ல காரியம் செய்தாய்! நம்முடைய உத்தியோகம் சம்பந்தப்பட்ட வரையில் எவராயிருந்த போதிலும் நமக்கென்ன? நாம் கண்டிப் பாய் இருக்க வேண்டியதே நம்முடைய கடமை. சந்தா நல்ல கடமையைக் கண்டு விட்டாய்! மனுஷ்யா ளுடைய யோக்கியதையைக் கூடப் பாராமலே நாம் நம் கட மையை நிறைவேற்றினால் தலைக்குக் கல் வந்து சேரும். அவ ருடைய பெருமை என்ன வஸந்தஸேனையின் மேன்மை என்ன அவர்கள் இருவரையும் அறியாதவர்கள் யார்? அவள் போகும் வண்டியை நாம் சோதனை செய்யவாவது! உனக்கு என்ன பைத்தியமோ அந்தக் காரியத்தை நான் செய்ய மாட் டேன். இராஜனுக்கு நீ மிகவும் வேண்டியவன். எது சம்பவித்த போதிலும் உனக்குப் பயமில்லை. நீயே வண்டிக்குள் சோதனை செய். வீர : அதென்ன அப்படிச் சொல்கிறாய்? இராஜனுக்கு நீ வேண்டியவனில்லையோ நீயே வண்டிக்குள் பார்; இதில் ஏதாவது துன்பம் நேரிட்டால் அதற்கு நான் உத்தரவாதியாய் இருக்கிறேன். நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சந்தா அடே வண்டியை நிறுத்து! பிரதா (தனக்குள்) இதுவும் துரதிர்ஷ்டமா ஆகா! இவ்வளவு பிரயாசைப்பட்டுத் தப்பித்து வந்ததும் பயனில்லாம்ல் போய் விடும் போல் இருக்கிறதே! என்னிடத்தில் ஒரு கத்திகூட இல் லையே! திரும்பவும் கைதியாகச் சிறைச்சாலையில் அடைப்பட் டிருப்பதைவிட உயிரை விடுவதே மேலானது. நல்லது வரட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/128&oldid=887363" இலிருந்து மீள்விக்கப்பட்டது