பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர அடே முண்டனம் உன் தலை எப்பொழுது மொட்டை ஆயிற்று? உன் புருஷன் இறந்து எத்தனை நாளாயிற்று? மொட்டை அடித்துக் கொண்டால்தான் சந்நியாசியோ? அப்பொழுதுதான் சுவர்க்கம் நேரில் தெரியுமோ? முட்டாள் உனக்கு இந்தச் சோலை யில் என்ன வேலை? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" சந்நி ஐயா! இந்த நீரோடையில் என்னுடைய காஷாய வஸ்திரத்தை அலசும் பொருட்டு வந்தேன். வேறு எதற்கும் வர வில்லை. - வீர: ஓகோ இந்த இழி தொழிலுக்காகத்தான் இந்தச் சோலை ஏற்பட்டதோ? உன்ஆபாசக் கந்தையைக் கசக்க இதுதான் இடமோ? சந்நி பிரபு நான் இப்போது சமீப காலத்திலே தான் சந்நியாசியானேன். தெரியாமல் செய்த பிழையை மன்னித்துக் கொள்ள வேண்டும். வீர ஏன் இப்படிச் செய்தாய்? ஏனடா போக்கிரிப் பயலே! நீ பிறக்கும் பொழுதே சந்நியாசியாய்ப் பிறக்கவில்லை? (அடிக் கிறான்) சந்நி : ஹா. ஈசுவரா இதெல்லாம் உனக்கு சம்மதியானால் சரிதான்! தோழன் : /விலக்கி விட்டு) அடே சந்நியாசி! ஒடிப்போ! இங்கே நிற்காதே. (வீரசேனன் உதைக்கிறான், சந்நியாசி போப் விடுகிறான்) - வீர: அடே இந்தச் சோலைக்கு வரும் போதெல்லாம் எனக்கு அந்த வஸந்தஸேனையின் நினைவே உண்டாகிறதே! என்ன செய்வேன்? நம்முடைய உடம்பில் உண்டாகும் புண் எப்படி நோகுமோ, அப்படி அல்லவோ அவளுடைய நினைவு என்னை வருத்துகிறது! இந்தச் சோலைக்கு அவளை அழைத்து வர எத்தனை நாட்களாய் முயன்றும் அது பலிக்கவில்லை! அவள் இங்கு வந்து விட்டால், ஒன்று அவள் என் சொற்படி இணங்க வேண்டும். அல்லது அவளை இவ்விடத்திலேயே வெட்டிப் புதைத்து விடவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/138&oldid=887386" இலிருந்து மீள்விக்கப்பட்டது