பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 165 தாய் ! (தனக்குள்) இதென்ன மோசமோ தெரியவில்லையே! என் அருமைப் பெண் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ தெரியவில்லையே! இவரை ஏன் இப்படி வருந்துகிறார்கள்? (திபாயாதிபதிக்கு நியாயாதிகளே இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார். இவர் ஒரு எறும்பைக்கூட வதைப்பவர் அல்லவே! தன் உயிர் போவதாய் இருந்தாலும், பிறருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டாரே! இவர் எவ்லுளவு ஏழ்மை நிலையில் இருந்த போதிலும், இவருடைய மேன்மை ஒரு நாளும் போகாது.என் மகள் தன் ஆபரணங்களை ஒரு நாளிரவு இவரிடம் வைத்து வந்தாள். அவைகள் களவு போய் விட்டன; இவர் அவற்றைவிட எவ்வளவோ விலை உயர்ந்த ஒரு வைர மாலையைக் கொடுத்தார். அப்படி இருக்க, இவர் அற்ப நகை களுக்காகக் கொலை செய்தாரென்பது முழுதும் பொய். நியா மாதவராயரே! அவள் உம்முடைய மாளிகைக்கு எப் பொழுது வந்தாள். மாத நேற்று சாயங்காலம். நியா பிறகு எப்பொழுது போனாள், நடந்து போனாளா, அல்லது வண்டியில் போனாளா? மாத அந்த விவரம் எனக்குத் தெரியாது; அவள் இன்று காலையில் தன் வீட்டிற்குப் போகுமுன் நான் எழுந்து என் உத்தி யான வனத்திற்குப் போய் விட்டேன். /விரகன் அவசரமாக வருகிறான்.) வீர நியாயாதிபதிகளே! நமஸ்காரம். நியா வீரகா! எங்கு வந்தாய்; என்ன விசேஷம்? வீர ஒரு பிராது சொல்லிக் கொள்ள வந்தேன்... நியா : இன்று காலையில் பிரதாபனைத் தேடிக் கொண்டு போன போது, ஒரு பெட்டி வண்டி ஊருக்கு வெளியில் அவசர மாகப் போனதைக் கண்டேன். என்னுடன் வந்த சந்தானகன் வண்டியை நிறுத்தி அதற்குள் பார்த்தான். அதன் பிறகு, நானும் உட்புறம் யார் இருந்தார்கள் என்பதைப் பார்க்கப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/167&oldid=887447" இலிருந்து மீள்விக்கப்பட்டது