பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 169 மகா பாதகத்தைச் செய்தார் என்று எங்கே எனக்கு முன்பாகத் தெரிவி! இதோ இந்தத் தடியால் துற்புத்தியே நிறைந்த உன் தலை ஆயிரம் சுக்கலாகும்படி உடைக்கிறேன். வீர எல்லோரும் இதைக் கேட்டீர்களா எனக்கும் மாதவ ராயருக்கும் உள்ள வித்தியாசத்தில் இவன் தலையிட இவனுக்கு என்ன அதிகாரம்? அடே இதோ பார், நான் உன் தலையை உடைக் கிறேன். (இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாய்த்து கட்டிப் புரளுர கின்றனர். ஸோமேசன் மடியில் வைத்திருத்த ஆபரணங்கள் கீழே விழுகின்றன.) வீர : (அவற்றை எடுத்துக் காட்டி) இதோ பார்த்தீர்களா அவள் மேலிருந்து அபகரித்த ஆபரணங்கள். நான் சொன்னது நிஜமாய்ப் போய் விட்டது பார்த்தீர்களா! அவனுக்கு இவனும் உடந்தை. (திபாயாதிபதிதன்சிரத்தைக் கீழே போட்டுக் கொள்ளுகிறார்/ மாத (ஸோமேசனிடம்) என்னுடைய கால வித்தியாசத் திற்குத் தகுந்த விதம் இந்த சமயத்தில் இவ்வாபரணங்களும் விழ வேண்டுமா இது என்னுடைய கர்மவினை எப்பொழுது இவைகள் விழுந்தனவோ, அப்பொழுது நானும் விழுந்தேன். தப்புவதில்லை. * ஸோ: நடந்த விவரங்களை நன்றாய் விளங்கச் சொல்கிறது தானே. - மாத சந்தேகத்தைத் தரக்கூடிய இத்தனை சங்கதிகளுக்கு மத்தியில் உண்மை இன்னதுதான் என்பதை அறிய இராஜ பீடத் திற்கு வல்லமை இல்லை. என்ன செய்கிறது! இவ்விதமாக அவ மானப்பட்டு நான் உயிரை விடவேண்டும் என்று இருந்தால், அதை நாம் எப்படித் தடுக்கக் கூடும்? நடப்பது நடக்கட்டும். நியா (தாய்க் கிழவிக்கு ஸ்திரியே இந்த ஆபரணங்கள் உன் மகளுக்குச் சொந்தமானவைகளா? தாய் : அவைகளைப் போலத்தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/171&oldid=887457" இலிருந்து மீள்விக்கப்பட்டது