பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 35 கட்டிப் பழக்கிவிடலாம். ஆனால் ஸ்திரீகளின் பிரியத்தை மாத்திரம் அவர்களுடைய மனதிற்கு விரோதமாகத் திருப்ப முடி யாது என்பது தெரியாதா? இதனாலே காரியம் ஒரு நாளும் பலிக் காது. பழம் தானாய் பழுக்க வேண்டுமே யொழியத் தடியால் அடித்தால் பழுக்குமா? போகலாம் வாரும். வீர உனக்கு விருப்பமானால் நீ போகலாம். நான் இங்கே தான் இருப்பேன். தோழ நல்லது நான் போகிறேன். (போகிறான்) வீர. இவன் போனால் போகட்டும். கோழி கூப்பிடா விட் டால் பொழுது விடியாதோ என்ன பிரமாதம் (ஸோமேசனை பார்த்து, அடே முஷ்டி வாங்கும் பிராம்மணா என்ன சொன் னாய்? உன் பல்ல்ை உடைக்கிறேன். ஒரே உதையில் உன்னைக் கீழே வீழ்த்துகிறேன் பார். லோமே நாங்கள்தாம் ஏற்கெனவே கீழே வீழ்த்தப் பெற் றிருக்கிறோமே! வீர யாரால்? லோமே தலை விதியால். வீர : அப்படியானால் எழுத்திரு. பார்க்கலாம். ஸோமே : எழுந்திருக்கத்தான் பார்க்கிறோம். வீர எப்பொழுது? ஸோமே ! நல்ல காலம் திரும்பி வரும் பொழுது. வீர : அப்படியானால் அதுவரையில் அழு. ஸோமே : அப்படித்தான் செய்கிறோம். வீர எதற்காக அழுகிறீர்கள்? ஸோமே . எங்களுடைய கால கதியை நினைத்து அழுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/37&oldid=887553" இலிருந்து மீள்விக்கப்பட்டது