பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தாகத்தைத் தீர்ப்பதினாலேயே கோடை காலத்தில் ஏரி வற்றிப் போவதைப் போலானார். அவர் தனவந்தராய் இருந்த காலத் தில் அப்படி இருந்தமையாற்றான், அவரை இப்பொழுதும் மரியாதைப் படுத்தாதவரே இல்லை. இந்த நகரத்தில் அவரைப் போற்றாதவரும் உண்டோ! வீர அவனைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்தத் துரும்பு யார் இவனென்ன பெருத்த போர் வீரனா? இவன் சீதையின் புத்திரன் துரியோதனனா அல்லது இராவணனுடைய மகன் தரும புத்திரனோ? தோழ ஆகா! நல்ல புத்திமான் போதும் நாம் போவோம் வாரும். மாதவராயருடைய யோக்கியதையை இந்த ஊரில் அறி யாதவர் இல்லை. அவர் வயதில் மிகவும் பாலியராய் இருந்த போதிலும் அவருடைய முதிர்ச்சி யாருக்கு வரும்! நல்லோரைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுபவர். புத்திமான்களுக்குக் கண்ணாடி போன்றவர். தீமை செய்தவருக்கும் நன்மையே செய்பவர். நற்குணங்கள் நிறைந்த பொக்கிஷ சாலை. மரி யாதைக் கடல். பக்திக்கு உறை கல். புருஷரில் உத்தமன். புத்தி மான். தயாளு. தரும புத்திரன். அணுவளவும் சத்தியம் தவறாத வர். இந்த ஊரில் அவர் ஒருவரே ஸ்தோத்திரத்திற்கு அருகமான வர். அவ்வளவு சிறந்த யோக்கியரை நாம் அவமானம் செய்தது பெரும் பிழை. நாம் இனி இவ்விடத்தில் நிற்பது தவறு போகலாம். வீர என்ன வஸந்தஸேனையை விட்டு விட்டா? தோழ அவள்தான் எங்கேயோகாணாமல் போய் விட்டாளே வீர அவள் எப்படி காணாமல் போய் விடுவாள். பார்க்க லாம் ஒரு கை. அவளைக் கண்டுபிடிக்கிற வரையில் நான் இவ்விடத்தை விட்டு வரமாட்டேன். தோழ என்ன பிரயோசனம் நாம் எந்த அருமையான காரி யத்தையும் செய்து விடலாம். காட்டானையைப் பிடித்து அடக்கி விடலாம். சிங்கம், புலி முதலிய துஷ்ட விலங்குகளைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/36&oldid=887551" இலிருந்து மீள்விக்கப்பட்டது