பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அண்ணே காலடியைப் பாருடா கோணக் கோணலா இக்கு துடா! . முண் என்னாத்துனாலே அப்படி இக்குதுன்னு ஒனக்கு அம்புட்டு ரோசனை புரியல்லே பாத்தியா பயத்துனாலேடா அது அவன் ஒடம்பு நடுக்க மெடுத்துக்கிச்சு காலு தாறு மாறாய்ப் போயிக் கெடக்குதுடா திண் : காலடி இத்தோடே நின்னு போச்சே! இதென்னடா ஒவித்திரியம் எங்கிட்டோ மாயமாப் பறந்து பூட்டாண்டா சனியம் புடிச்சவன். முண்: காலடியைத் திருப்பி வச்சுக்கிறாண்டா என்னாசாமார்த் தியமுண்டா பயமவனுக்கு முதுவுப் பக்கமா திருப்பிக்கினு கோயிலுக்குள்ளற போயிருக்கிறாண்டா என்னை ரோசனைடா இவனுக்கு கோயிலுக்குள்ளற நாம்ப வரமாட்டோமுன்னு நெனெச்சுக் கினாண்டா இவன் வாடா உள்ளற போயிக் கோளிக் குஞ்சேப் பிராந்து அமுக்கறாப்லே குபிருன்னு புடிச் சுக்கலாம். (உள்ளே போகிறார்கள்) மகிபாலன் : (தனக்குள்) இவர்கள் இங்கேயும் வருகிறார் களே என்ன செய்கிறது? இங்கு அதிகமாய் வெளிச்சம் இல்லா மல் மங்கலாக இருக்கிறது. நான் ஒரு கல் விக்கிரகத்தைப் போல அசையாமல் நிற்கிறேன். இருவர்கள் என்னை விக்கிரக மென்று நினைத்துக் கொண்டு போய் விடுவார்கள். (அப்படியே நிற்கிறான்; உள்ளே வந்த அவ்விருவரும் அவனைக் கண்டு பரிகாசமாகத் தமக்குள் சைகை செய்து கொள்கிறார்கள்.) . முண் அடே திண்டா அந்தாலே சாமி இக்குது பாத்தி யாடா மனிசனெப் போல இக்குதுறா திண் : சாமி எம்பிட்டுப் பெரிசுடா அண்ணே அது மரத் துலே செஞ்சதுறா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/46&oldid=887572" இலிருந்து மீள்விக்கப்பட்டது