பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 47 முண் இப்பவே குடுக்கணும்; இல்லாமெப் போனா உட மாட்டேன் ஒன்னை. மகி ஐயா கோபித்து கொள்ள வேண்டாம். இத்தனை நாள் பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னம் கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? என் கையில் இருந்தால் கொடுக்க மாட்டேனா! என்னை அடித்தால் பணம் வந்து விடுமா? முண் ஒதவாது. ஒன்னைக் கொஞ்சூண்டுகூட நம்பவே மாட்டேன். ஓங்கிட்ட ரோக்கிதையே இல்லே. இப்பத்தான் பணம் ஒனும்; போடு பணத்தெ! மகி ஐயோ! நான் என்ன செய்வேன் என்னிடத்தில் ஒரு காசுகூட இல்லையே. நான் இப்பொழுது எப்படி 10-ரூபாய் கொடுப்பேன். எனக்கு மயக்கம் வருகிறதே. என் தலை சுற்று கிறதே! (மயங்கினவனைப் போலக் கீழே விழுகிறான். இருவரும் அடிக்கிறார்கள்.) முண் அடியாத்தே! மயக்கமாவா வருது? எம்பிட்டு சாலங் கிறேன்! திண் சாமிக்குச் சன்னதம் வந்துக்கிது. பூசெ போட்டாச் சரியாப் போவும். (அடிக்கிறான்.) மகி : (அடியைப் பொறுக்க முடியாதவனாய், எழுந்து ஐயோ! உயிர் போகிறதே! அடிக்க வேண்டாம். அடே அடிக்க வேண்டாம்! இனி அடித்தால் பிராணன் போய்விடும். பிறகு பணமும் போய்விடும். சத்தியமாய் இன்றைக்குள் எப்படி யாவது பணத்தைக் கொடுத்து விடுகிறேன். கொஞ்சம் சாவ காசம் கொடுங்கள். என்னிடத்தில் இப்பொழுது பணமே இல்லை. சோதனை செய்து பாருங்கள். திண் பணம் இல்லாத முண்டே ஏண்டா கடன் வாங்கினே? முண் பணமில்லாட்டி எதெனாச்சும் அடகு வைடா களுதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/49&oldid=887580" இலிருந்து மீள்விக்கப்பட்டது