பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மகி (திண்டனைத் தனியாய் அழைத்துப் போய்/ ஐயா உம்மை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். ஒரு உதவி செய்ய வேண்டும். முண் என்னடா செய்யனும்? மகி என்னிடத்தில் இப்பொழுது பணமில்லை. பாதி கொடுத்து விடுகிறேன். இன்னொரு பாதியைத் தள்ளிக் கொடுத்து விடுகிறீரா? முண் சரி சம்மதித்தான் அதையாச்சும் வை கீளே. மகி (முண்டனைத் தனியாக அழைத்துப் போப்/ அடே! ஒரு உபகாரம் செய். என்னிடத்தில் சிறிய நகை ஒன்றிருக்கிறது. அது பாதிக் கடனுக்குத்தான் சரியாகும். அதைக் கொடுக்கி றேன். இன்னொரு பாதிக் கடனை மன்னித்து விடுகிறாயா? முண் சரி. அப்படியே ஆவட்டும் கொண்டா நவையெ. மகி (முண்டனைப் பார்த்து உரக்க, நீபாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறது நிச்சயந்தானே? முண் ; நிச்சியந்தான். மகி (திண்டனைப் பார்த்து உரக்க உனக்கும் சம்மதந் தானே! நீயும் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறாயா? திண் சரி. மகி சந்தோஷம் இப்படி யார் உதவி செய்யப் போகிறார் கள். நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவர்கள். இந்த உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் உத்திரவு பெற்றுக் கொள் கிறேன். (போகிறான்.) முண் எங்கிட்டு வேகமாப் போறே? நில்றா நில்லு. மகி: ஏன் ஐயா நிற்கச் சொல்லுகிறாய்? நீ பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தாய்; திண்டன் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தான். கடன் முழுதும் தீர்ந்து போய் விட்டது. நான் போகிறேன். என்னை ஏன் திரும்பவும் வதைக்கிறீர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/50&oldid=887584" இலிருந்து மீள்விக்கப்பட்டது