பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் விசேஷித்ததாய் நாம் கொண்டாட வேண்டும். ஆனால் ஜனங்கள் பின்னதை அலட்சியமாக மதிக்கிறார்கள். அதிருக்கட்டும்; நீ என் மனோ வியாதியின் காரணத்தைக் கொஞ்சம் அறிந்து கொண்டதாய்த் தெரிவித்தாயே! எங்கே? இன்னதென்று சொல் பார்க்கலாம். மல்லி (மருவே செறித்த’ என்ற திருப்புகழ் வர்ணமெட்டு) ஆனந்த பைரவி அகமோவிளைக்க முகமோ வெளுக்க அழகே யொளித்த திதுதீது, அறிவேனனைத் துமதவேள் விடுத்த கணையேவகுத்து குறியாகும். இச்சின்னங்கள் எல்லாம் காதல் நோய்க்குத்தான் உண்டா கும். என்னை ஏன் இப்படிப் பரீட்சிக்கிறீர்கள். தயவு செய்து இரகசியத்தை என்னிடத்தில் தெரிவியுங்கள். அநியாயமாய்த் தங்களுடைய மெல்லிய மேனி வதைபடுகின்றதே எந்த இராஜ குமாரன் தங்களுடைய மனதை இப்படிக் கவர்ந்தான்? உண் மையைச் சொல்லுங்கள். வஸ் : (டிெ-வர்ணமெட்டு) - கல்யாணி ஸ்கியே! கணத்திற்பலமாதை நத்துநிருபோர் மணத்தல் ஸ்ரியாமோ? ஸ்கியே எனக்கு விதியோ? மனத்தும் நினையேன் சலிக்கும்-மகிபோரை இருந்திருந்து இராஜகுமாரன் பேரிலா காதல் கொள்ள வேண்டும்? அவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் மனையாட்டி ஆயிற்றே அவர்கள் காதல் நிலைத்ததல்லவே! அவர்களை நம்பினோர்களின் கதி அதோ கதியல்லவோ இன்றைக்கு என்னை விரும்புவார்கள் நாளைக்கு வேறு ஒருத்தியின் பேரில் மோகம் கொண்டு என்னை அலட்சியம் செய்வார்களே! அவர் களை நம்புவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போன்றதே! மல்லி ; (டிெ வர்ணமெட்டு) - ஆபேரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/60&oldid=887607" இலிருந்து மீள்விக்கப்பட்டது