பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எவ்வளவு மரியாதை செய்து நம்மை உபசரிக்கிறான் வேதங் களைப் படித்த திருடன் சம்பாதனை இல்லாமல் வெறுங் கைய னாய்த் திரும்பக் கூடாதென்னும் நல்ல எண்ணம் என்ன இவ னுடைய மேன்மைக் குணம் (அருகில் போகிறான்) ஸோமே : (அரைத் துக்கத்தில் திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு) நண்பரே! என்ன உம்முடைய கை இவ் வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது? சசி (தனக்குள் சே! நான் சுத்த முட்டாள் தண்ணீரில் கையை வைத்ததினால் என் கை குளிர்ந்திருப்பதை மறந்து விட் டேன். (கைகளை ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துச் சூடு உண் டாக்கிக் கொண்டு நகை மூட்டையை எடுக்கிறான்./ ஸோமே : (அரை நீத்திரையில்) மூட்டையை எடுத்துக் கொண்டீரா? . சசி ! (தனக்குள் ஆகா இந்தப் பிராம்மனோத்தமரின் உப காரத்தை என்ன என்று சொல்வேன்! (உரக்க/ ஆம்! எடுத்துக் கொண்டேன். ஸோமே : (தித்திரை மயக்கத்தில்) அப்பா கவலை ஒழிந் தது! இனி நன்றாய்த் துங்குகிறேன். (தரங்குகிறான்) சசி (தனக்குள்) பிராம்மனோத்தமரே தூங்கும் இப்படியே நூறு வருஷம் எழுந்திருக்காமல் நன்றாய்த்துங்கும். சரி எனக்கு நேரமாகிறது. இந்த மூட்டையை வஸந்தஸேனையின் வீட்டிற்குக் கொண்டு போய் மல்லிகாவின் கிரயத்தைக் கொடுத்து அவளுடைய அடிமைத் தன்மையை நீக்கி அவளை மீட்டுக் கொண்டு போகி றேன். (திடுக்கிட்டு) இதென்ன காலடியோசை கேட்கிறதே! யார் வருகிறார்கள்? அதோ யாரோ ஒருவன் வருகிறான். அவன் கூச்சலிடுமுன் அவனைக் குத்திக் கொன்று விடுகிறேன். (கோமளா வருகிறாள்) கோமளா : (தனக்குள்) இதென்ன ஓசை இது திருடனாய் இருக்குமோ! எங்கும் இருளாய் இருக்கிறதே விளக்கை ஏற்று கிறேன். (விளக்கை ஏற்றுகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/76&oldid=887638" இலிருந்து மீள்விக்கப்பட்டது