பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 77 என்னைத் துஷிக்காமல் இருக்கச் செய்தாயே! அதுதான் உதவி! /யோசனை செய்கிறார்) ஸோமே : என்ன ஆச்சரியம்? மூட்டை திருட்டா போய் விட்டது எப்படிப் போயிற்று? நம்மை நம்பி அவள் நம்மிடத் தில் ஒப்புவித்தாளே! மாத (பொதும் விசனத்துடன், ஆஹா நம்பிக்கை மோசம் செய்து விட்டேனே அவள் வந்து கேட்டால் என்ன சொல்வேன்? ஈவரா (மூர்ச்சிக்கிறார்) ஸோமே ; ஸ்வாமி! வருத்தப்பட வேண்டாம். நகைகளைத் திருடன் கொண்டுபோய்விட்டால் அதற்கு நாமென்ன செய் கிறது? இதைப் பற்றி நீங்கள் இவ்வளவு விசனப்படுவானேன்? மாத அடே மித்திரா திருட்டுப் போய் விட்டதென்று சொன்னால் என்னை யார் நம்புவார்கள் எனக்கு என்னமோ பெருத்த துன்பம் சம்பவிக்கப் போகிறது! தரித்திரனிடத்தில் சந்தேகம் உதிப்பதே இந்த உலக இயற்கை. இதுவரையில் நான் ஏழ்மைத் தன்மையினால் வருந்தி இருந்தேன்! இப்பொழுது என்னுடைய பரவிய கீர்த்திக்கும் அழிவு காலம் வந்துவிட்டதே! விருத்தம்: முகாரி போனதோ பெருமை யின்று புகழெலா மழியக்கால மானதோ! பொருளிலான் சொல் யாவரே மதிப்பர்? தீமை யானதோ புரிந்தே னிந்த அலக்கணிற் கருக ணாத லேனிதோ முன்னாட் டீமை? எங்ங்ணம் பொறுப்பே னேழை. ஐயோ! தெய்வமே என்ன செய்யப் போகிறேன்? ஸோமே ; இதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை வேண்டுவதில்லை. அவள் நம்மிடத்தில் ஒப்புவித்ததை பார்த்த வர் யார்? அதற்கு ஸாகூவியும் இல்லை ஒன்றும் இல்லை. நம்மிடத்திற் கொடுக்கவில்லை என்று நான் சொல்லி விடு கிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/79&oldid=887644" இலிருந்து மீள்விக்கப்பட்டது