பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் உள்ளே ஓட்டைச் சட்டிக்கும் வழி இல்லை' என்று சொல்லு வானே! ஸோமே ஐயோ பாவம் அவன் இவ்வளவு பாடுபட்ட தும் வீணாய்ப் போயிற்றே என்று விசனப்படுகிறீர்களே! நான் உங்களிடம் கொடுத்த வஸந்தஸேனையின் நகை மூட்டையில் தாம்பூலம் வைத்து அவனுக்குத் தத்தங் செய்து விடுகிறது தானே! மாத நகை மூட்டையை என்னிடத்தில் கொடுத்தாயா? என்ன விளையாடுகிறாய்? ஸோமே : (சந்தோஷமாக நல்ல வேளை நான் அதை உங்களிடம் கொடுக்காமல் இருந்தால், அதை அடித்துக் கொண்டு போயிருப்பான். எருமைக் கடாவைப் போல நான் தூங்கி விட்டேன் என்று சொல்லுவீர்கள்; தப்பினேன். மாத என்ன ஸோமேசா? இன்னமும் தூக்கக் கலக்கமா? இதுதானா பரிஹாஸம் பண்ணும் சமயம்? நகை மூட்டை ஜாக் கிரதையாய் இருக்கிறது அல்லவா? என் மனதிற் கவலை உண் டாய் விட்டது. ஹாஸ்யம் செய்யாமல் உண்மையாய்ப் பேசு. ஸோமே ; இதென்ன ஆச்சரியம்! நீங்கள் தான் பரிஹாஸம் செய்கிறீர்கள் வீணில் என்னோடு வாக்குவாதம் செய்யாமல் நகை மூட்டை இருக்கிறதா என்று முதலிற் பாருங்கள். மாத நீ என்னிடத்தில் எப்பொழுது கொடுத்தாய்? லோமே ! உங்கள் கை குளிர்ச்சியாய் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டே சற்று முன்பாகக் கொடுத்தேனே! மாத (தனக்குள் ஒகோ! அப்படித்தான் இருக்க வேண் டும் (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்து, மித்திரா உன் னுடைய உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். ஸோமே : ஆபத்து சமயம் என்பதை அறிந்து மூட்டையை உங்களிடத்தில் கொடுத்தேன். இது ஒரு உபகாரமா? மாத நீ செய்தது உபகாரமல்ல. 'தரித்திரன் வீட்டிற்குள் நுழைந்தேனே, ஒன்றும் அகப்படவில்லையே' என்று திருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/78&oldid=887642" இலிருந்து மீள்விக்கப்பட்டது