பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 79 பெருத்த அபவாதம் வத்து விடுமே தன் ஏழ்மைத் தனத்தினால், நகைகளை அவரே எடுத்துக் கொண்டதாய் அல்லவா ஜனங்கள் நினைப்பார்கள். பொழுது விடிந்ததும் இந்த அபவாத மொழியைக் கேட்பதைவிட இப்பொழுதே நாங்கள் இருவரும் நாவைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விடுவதே நல்லது (சிறிது யோசனை செய்கிறாள்) ஒகோ இதோ என் கழுத்தில் ஒரு வைர ஸரம் மிகுதியாய் இருக்கிறது. என்னுடைய ஆபரணங்கள் எல்லாம் போயும், இது விலை மதிப்பற்றது என்று இதை மாத்திரம் விலக்காமல் வைத்திருக்கிறேன். திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதைக் கொடுத்து விடுகிறேன். அதோ ஸோமேசர் நிற்கிறார். அவர் மூலமாக இதை அனுப்புகிறேன் ஒய் ஸோமே சரே! நம்முடைய எஜமானர் எங்கிருக்கிறார்? ஸோமே : அம்மணி! அவர் சகிக்க முடியாத விசனத்துடன் தன் சயன அறைக்குப் போய்விட்டார். கோகி : (தனக்குள் தன் வாலின் மயிரில் ஒன்று முள்ளில் மாட்டிக் கொண்டாலும், அந்த அவமானத்தைப் பொறுக்க முடி யாமல், அதன் பொருட்டு உயிரை விடும் கவரி மான் அல்லவோ என் பிராண காந்தர் அவர் என்ன செய்து கொள்வாரோ தெரிய வில்லை. நான் நேரில் அவரிடம் போய் இந்த வைர சரத்தைக் கொடுத்தால் அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். (உரக்க/ ஸோமேசரே! நாம் பேசாமல் இருந்தால் நம்முடைய எஜமானர் தன் உயிருக்கு ஹானி தேடிக் கொள்வார். ஆகையால் உடனே இந்த வைர ஸரத்தை அவரிடத்திற் கொண்டு போய்க் கொடுத்துத் திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதை அனுப்பச் சொல்லும். இதை அவர் எப்படியாவது ஏற்றுக் கொள்ளும்படி செய்யும். - ஸோமே : (சந்தோஷத்தோடு வங்கிக் கொண்டு) அப்படியே ஆகட்டும். (கோகிலமும் கோமளாவும் போப் விடுகிறார்கள்) மாத (தனக்குள்) (பாதிமதிநதி பேதுமனடை - என்ற திருப்புகழின் மெட்டு/

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/81&oldid=887650" இலிருந்து மீள்விக்கப்பட்டது