பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் விட்டோமா? அல்லது நாமே அபகரித்துக் கொண்டோமா? திருடன் கொண்டு போய்விட்டால் அதற்கு நாம் என்ன செய் கிறது? சூதாடி இழந்து விட்டதாகச் சொல்லுவானேன்? திருட்டுப் போய் விட்டதென்று சொல்லி அதற்குப் பதில் நாலைந்து வைரங்களை அனுப்பினால் ப்ோதுமே ஏழு சமுத்திரங்களை யும் கடைந்தெடுத்த சாரத்தை யொத்த இந்த ஸரம் முழுவதை யுமா அவளிடத்திற் கொடுக்கிறது? மாத ஸோமேசா என்ன நீ உலோபியைப் போலப் பேசு கிறாயே! லோமே தரித்திரன் எப்படி உலோபியாவான்? மாத சரி நேரமாகிறது! நான் சொன்னதைச் செய்! பொழுது விடியும் சமயமாய் விட்டது; நான் நித்திய கர்மானுஷ்டானம் செய்யப் போகிறேன். (போகிறார்) - ஸோமே ; (தனக்குள்) கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது என்றேனும் பொய்க்குமோ? ஒரு நாளும் இல்லை. இடம் வஸந்தஸேனையின் மாளிகை. மேன் 冷,参见 மாடியில் வஸந்தஸேனை சோபாவிற் சாய்ந்து |அங்கம் 1 கொண்டிருக்கிறாள் சசிமுகன் வெளியில் இருந்து மாளிகைக்குள் நுழைகிறான். காலம் மேற்படி தினம் விடியற்காலை. சசிமுகன் (தொண்டிச் சிந்து. நந்தன் சரித்திரம் 'பழன மருங்கனையும்' என்ற பாட்டின் வர்ண மெட்டு) 1. எனதே உயிர்நிலையாம் - அந்த இந்திர சந்திரரும் இணையோ! 2. மனதே நினைப்பதெல்லாம் - இந்த மாத்திரைக் கோலினால் யான் பெறுவேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/84&oldid=887655" இலிருந்து மீள்விக்கப்பட்டது