பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 97 மல்லி காணக் கிடைக்காத வென்றன் - மானே! நற்றேனே! என்னன்பே - என்னாவியே! வஸ் ஆசைக்குகந்த வென்றன்மாதே! நற்கோதே! கவலாதே! மறவாதே! மல்லி : சுந்தராங்கி நின்னையினி - மறவேன். வஸ சொன்னமே! நின் நன்மையினி - மறவேன். (மல்லிகா விசனத்துடன் வணங்கச் சசிமுகன் அவளை அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வரு கிறான். அந்த சமயத்தில் இராஜபாட்டையில் ஒருவன் அடியின் வருமாறு பறை சாற்றுகிறான்.) 'துடும், துடும், துடும், துடும், இதனால் சகலமான ஜனங்களுக்கும் அறிவிப்பது யாதெனில்:- பிரதாபன் என்னும் இடையன் அரசனாகப் போகிறேனென்று ஜோசியர்கள் மூலமாய்த் தெரிகிறபடியால், அவனைப் பிடித்துச் சிறையில் அடைக்கும்படி நமது மகாராஜன் உத்தரவளித்து இருக்கிறார். அவனைக் காண்போர் உடனே பிடித்து ஆஜர் செய்விக்க வேண்டும். ஜனங்கள் இந்த விஷயத்தில் எவ்வித அச்சமும் கொள்ளாமல் தம் தம் வீட்டில் இருக்க வேண்டும். துடும், துடும், துடும், துடும்.' சசி (மல்லிகாவிடத்தின்) என்ன ஆச்சரியம்! என்னுடைய பிரிய நண்பனாகிய பிரதாபனை அரசன் சிறைப்படுத்த முயலும் சமயத்தில் நான் இப்படி ஸ்திரீ விஷயத்தில் என் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேனே! இந்த உலகத்தில் மனிதருக்கு மிகவும் அருமையானவர்கள் மனைவியும், நண்பனுமே என்ற போதிலும் நூற்றுக்கணக்கான பெண்மணிகளினும் ஸ்நேகி தனே மேலானவன்; ஆகையால் முதலில் அவனிடம் போய் எங்கேயாவது மறைந்து கொள்ளும்படி சொல்லி விட்டு வர வேண்டியது என்னுடைய கடமை. போகிறேன். மல்லி நில்லும் நில்லும் நீர் போக வேண்டுமானால், முன்னால் என்னை யோக்கியமான ஸ்நேகிதர் யார் வீட்டிலாயி வ.கோ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/99&oldid=887690" இலிருந்து மீள்விக்கப்பட்டது