பக்கம்:வரதன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வரதன் அவன், வரதன் மீதிருந்த ஆசையால் தன் மனத்தை ஒரு வாறு சரிப்படுத்திக்கொண்டு, மெதுவாக அடிமேல் அடி வைத்து உள்ளே சென்ருன். கண்ணன் அவ் வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையின்மீது சாய்ந்த வண்ணம், இத்தனை நாள் பேசாதிருந்த நான் இன்று வரதனிடம் எவ்வாறு பேசுவது? என எண்ணமிட்டுக் கொண்டிரும் தான. 9. வரதன் எங்கே ? வரதன் தாயாகிய குமுதவல்லி அன்று தன் மைந்தன் வருகையை மிக்க ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். ஏனெனில், குமுதவல்லிக்கு வரதனையன்றி வேறு குழந்தை இல்லாமையால், அவள் அவனேயே ஆளுக வும், பெண்ணுகவும் அலங்கரித்து அழகு பார்ப்பதுண்டு. அன்று மல்லிகைப்பூ மிகவும் மலிவாக விற்றதால், அவள் அதனை மிகுதியும் வாங்கிவைத்திருந்தாள். முருகன் உள்ளே சென்றபோது வரதனின் அன்னை, அம்மலர்களை மாலையாகத் தொடுப்பதில் கண்ணும் கருத் துமாய் இருந்தாள். ஆதலால் அவள், முருகன் வந்த தைக் கவனிக்கவேயில்லை. முருகன் சிறிது நேரம் அங்கே நின்றிருந்து, பின்னர் மாமி, வரதன் எங்கே 2' என்ருன். இதைக் கேட்டதும் குமுதவல்லி, திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினுள். பின்னர், முருகா, நீ என்ன கேட்கிருய் வரதன் உன்னுடன்தானே வரவேண்டும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/47&oldid=891164" இலிருந்து மீள்விக்கப்பட்டது