பக்கம்:வரதன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வரதா-வரதா!' no _ - - கள். என்ன கூறியும் குமுதவல்லியின் கண்களில் 1 வடிந்த வண்ணமாகவேயிருந்தது; தாமோதரப்பிள்ளையும் எண்ணமும் ஏக்கமும் கொண்டவராகவே யிருந்தார். 12. வரதா-வரதா ! ? மணி இரவு பதினொன்ரு யிற்று : பன்னிரண்டும் அடித் தது. வரதனும் அகப்படவில்லை : கண்ணனும் முருக கனும், வரதன் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டேயிருந்து, பின் அங்கேயே உறங்கிவிட்டார்கள். பெரியோர்களிலும் பலர் உட்கார்ந்தவண்ணம் அங்கே உறங்கி விழுந்தார்கள். முருகன் அன்னையும், மற்றும் இரண்டொரு பெண் களும், வரதன் இதோ வந்துவிடுவான்-ஏன் ? வந்து கொண்டே யிருப்பான்’ என்று குமுதவல்லிக்குத் தேறு தல் கூறிக்கொண்டேயிருந்தனர். என்ருலும், குமுதவல்லி சிறிதும் தேறுதல் அடையவில்லை. அவள் அங்குள்ளோ ரைப் பார்த்து, அம்மா, நான் என்றும் என் குழந் தையை விட்டுப் பிரிந்திருந்த தில்லையே' என்பாள் ; 'ஆ நான் இன்று அவனுக்குப் பூமுடித்து அழகுபார்க்க வேண்டுமென்று, மல்லிகைப்பூ மிகுதியும் வாங்கிவைத் தேனே' என்பாள் அம்மா, நாங்கள், அவன் ஒருவனைக் கொண்டு ஊராளலாம் என்று எண்ணியிருந்தோமே,' என்பாள் ; என் கண்ணே, வரதா நீ எங்கேயடா இருக் கின்ருய் ? என்பாள் ; ஐயோ மணி ப்ன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டதே ' என்பாள் ; 'அம்மா, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/64&oldid=891200" இலிருந்து மீள்விக்கப்பட்டது