பக்கம்:வரதன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வரதன் இன்னமும்-வருவான் வருவான்-என்று சொல்லுகின் lர்களே' என்பாள் என் செல்வத்தை நானும் சென்று தேடுகிறேன்' என்பாள் எழுந்து நிற்பாள் : இரண்டிொரு அடிகளும் எடுத்து வைப்பாள். அப்போது, அருகே யிருப்பவர்கள் அவளைப் பிடித்து உட்காரவைத்துப் பலப் பல கூறி அவள் துயரத்தைப் போக்க முயல்வார்கள். வரதன் தந்தையாகிய தாமோதரப்பிள்ளையும் அவ் வாறே வருந்திக்கொண்டே யிருந்தார். அப்போது, அடுத்த விட்டுப் பெரியவர் அவருக்குத் தைரியம் சொல்லிக்கொண் டிருந்தார். முருகன் இளைய தமயன. கிய கந்தனும் அருகே யிருந்து அப்பெரியவர் சொல்லுவ தற்கெல்லாம், ஆம்'- அப்படித்தான் இருக்கவேண் டும்’-"அதுவே சரி’ என்று கூறித் தலை யசைத்துக் கொண்டிருந்தான். - தாமோதரப்பிள்ளை, அவர்களை அழைத்துக்கொண்டு காவல் கூடம் செல்லுவார் ; இரண்டு மூன்று தெருக்கள் சுற்றுவார் ; குளம் குட்டைகளைக் கூர்ந்து நோக்குவார் ; மறுபடியும் வீட்டுக்கு வருவார் , திண்ணையின்மேல் உட் கார்ந்து கொண்டு முகவாய்க்கட்டையின்மேல் கையை வைத்துக்கொண்டு ஏதேதோ எண்ணுவார் ; மறுபடியும் எழுந்து உலாவுவார் ; உள்ளே சென்று தம் மனைவிக்குத் தேறுதல் கூறுவார் ; முடிவில் தாமே அழுவார்; என் மகனே - மகனே, உன்னை இவ்விதம் இழக்கவோ நான் இத்தனை நாள் வளர்த்தேன்’ என்பார் ; 'ஆ | இதுவரை யில் வராதவன் இனி வரப்போகின்ருனே' என்பார்; ‘நான் பேதை-அவன் வருவான் வருவான்-என்று இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கின்றேனே! என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/65&oldid=891202" இலிருந்து மீள்விக்கப்பட்டது