பக்கம்:வரதன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. வரதன் அவர் காங்கள் கூறியதை நிதானமாகக் கேட்டுப் பிறகு, இங்கே எந்தச் சிறுவனும் வரவில்லை; இதுவோ சிறிய ஊர் : யார் வந்தாலும் எங்களுக்குத் தெரியும் ;-பட்ட ணத்தில் பிள்ளைகள் காணுமற் போய்விடுகிருர்கள்என்று நானும் அடிக்கடி கேள்விப்படுகிறேன். அப்ப டிச் சிறுவர்களே மயக்கி இழுத்துக் கொண்டு போகும் மோசக்காரர்கள் பெரும்பாலும் ஊருக்குள் வரமாட்டார் கள் ; எங்கோ-தோட்டம் துரவுகளுக்கு அழைத்துச் சென்று, தங்களுக்கு வேண்டிய நகைகளைப் பிடுங்கிக் கொண்டு அச்சிறுவர்களை அங்கேயே கழுத்தை முறித்துப் போட்டுவிடுவார்கள் : அல்லது உயிரோடு விட்டுப் போவ தும் உண்டு. சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு கூட, இந்த ஊருக்கு அருகிலேயே அப்படி ஒன்று கடந்ததாக நான் கேள்விப்பட்டேன்’ என்ருர். " அப்போது ஆசிரியர், என் மு. க த் ைத ப் பார்த்தார்; நானும் அவர் முகத்தைப் பார்த்தேன். பிறகு நம் ஆசிரியர், ‘எங்கள் டசி று வ னை, அவ்விதம் அழைத்துச் சென்றதை இந்த ஊரார் யாரே னும் பார்த்திருக்கலாமே என்பது என் எண்ணம்’ என்ருர். அது பொழுது விடிந்தால் தான் தெரியும்: இந்த இரவில் யாரைக் கேட்பது ? நீங்களும் சந்தேகமா கத்தான் சொல்லுகின்றீர்கள். எதற்கும்-அதோ தெரி கின்றதே!-அந்தத் தோட்டம்-அதற்குப் பக்கத்தில் இருக்கும் ஏரிகரை-முதலிய இடங்களில் சென்று பார்க்க வேண்டும். இப்போதோ நல்ல நிலவு இல்லை. அதுவும் மறையும் சமயமாக இருக்கிறது. அங்கே பூச் ப்ெ புழுக்கள் இருக்கும்’ என்ருர் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/81&oldid=891236" இலிருந்து மீள்விக்கப்பட்டது