பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 27 அருகில் இருந்த ஒரு ஒட்டவில் காபி டிபன் சாப் பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். மாதா மாதம் அவரே கணக்குப்படி ஒட்டலுக்குப் பணம் கொடுத்து விடுவார். எனக்கு செலவுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்ள லாம். எப்படியோ, எனக்கு சிரமமோ கவலையோ ஏற்படாத விதத்தில் வாழ்க்கை வண்டி ஒடிக் கொண் டிருந்தது. பி. எஸ். செட்டியார் ஒரு மூத்த சகோதரனின் அன்பையும் பரிவையும் என்னிடம் கொண்டிருந்தார். நான் வளர்ச்சி பெற வேண்டும் என்று அவர் கருதினார். ஆயினும், தனது பத்திரிகை இருந்தபடியே இருப்பதுதான் லாபகரமானது; அதை வேகமாக வளர வைப்பது நஷ்டத்தையே ஏற்படுத்தும் என அவர் நம்பினார். ஆகவே, குறைந்த அளவில் பத்திரிகை அச்சிடுவதே அவருடைய பிசினஸ் கொள்கையாக இருந்தது. அதில் எனது சுயசிந்தனை களையும் சுதந்திர எழுத்துக்களையும் என் இஷ்டம் போல் வெளியிடுவதில் அவர் குறுக்கிட்டதில்லை. எனது உழைப்பையும், சில மாதங்களில் பத்திரிகை பெற்றிருந்த கவனிப்பையும் உணர்ந்து கொண்ட ஆசிரியர் அவராகவே விரும்பி என் பெயரை துணை ஆசிரியர் என்று பத்திரிகையில் அச்சிட ஏற்பாடு செய் தாா. அது சினிமாப் பத்திரிகைதான். என்றாலும், சினிமா நடிக நடிகையர் பேட்டியோ, வாழ்க்கை வரலாறோ அதில் வந்ததில்லை. பட விமர்சனம் நல்ல முறையில் சுவையாக வெளிவரும், சினிமா வட்டாரச் செய்திகள், விறு விறுப்பான தகவல்கள்,