பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் வம்பளப்புகள் முதலியவற்றை ஆசிரியரே எழுதிக் கொள்வார். சூடாகவும் சுவையாகவும் எழுத வேண்டும் என்றால், விஷயத்தை என்னிடம் சொல்லி, என்னையே எழுதும்படி கேட்டுக் கொள்வார். சினிமாப் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய போதிலும், நான் எந்த சினிமா ஸ்டுடியோவுக்கும் போய் பார்த்ததில்லை. எந்த ஒரு சினிமா நடிகன் அல்லது நடிகையையும் நேரில் கண்டு பேசியதில்லை. எந்தப் படாதிபதியையும் பட டைரக்டரையும் சந்தித்ததுமில்லை. அப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மில்லை, - இலக்கிய உலகில் முன்னேற வேண்டும் எனும் ஆசையே எனக்கு இருந்தது. அதற்காக சென்னை சேர வேண்டும் என்ற நினைப்பு. சினிமாப் பத்திரி கைக்கு ஆறு மாதங்கள் உழைத்தது போதும் என்று பட்டது. இதை ஆசிரியரிடம் அறிவித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். வருத்தப்பட்டார். நீண்ட சொற்பொழிவாற்றினார். எனது எதிர் காலம் பற்றிய அக்கறை அவருக்கு உண்டு என்றும், "சினிமா உலகம்' பத்திரிகையை இன்னும் சிறந்த கலை இதழாக வளர்க்கலாம் என்றும் சொன்னார். "உங்களுக்காக தனியே ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்கும் எண்ணம் எனக்கு இருக்கிறது. சென்னை யில் இருந்தபோது கவிஞர் வாரதிதாசன் சிறிது காலம் சினிமா உலகம் பத்திரிகையை கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்காக நிலா என்ற பெயரில் இலக்கிய இதழ் ஒன்று நடத்தத் திட்டமிட் டிருந்தேன். டிக்ளரேஷன் வாங்கி, அட்டைக்கு உரிய