பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின்.போராட்டங்கள் | 33 சில நாட்களுக்கு ஒரு முறை புதுமைப்பித்தன் வீட்டுக்குப் போய் அவரை கண்டு பேசினேன். எழுத்தாளர் வ.ரா. நவசக்தி'யில் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் எப்பவாவது ஆபீசுக்கு வந்து போனார். - வ.ரா. உற்சாகி. உற்சாகமாக உரக்கப் பேசுவார். வாய் விட்டு உரத்துச் சிரிப்பார். அப்படியே அனை வரும் சிரிக்க வேண்டும் என்று கூறுவார். மற்றவர் களை பாராட்டுவதில் அவர் கஞ்சத்தனம் காட்டுவ தில்லை. என்னையும் அதிகமாகவே பாராட்டினார். நான் எழுத்துலகில் மு ன் ேன று வ த ற் க க திருநெல்வேலியிலிருந்து நடந்தே கிளம்பினேன். ஒரு சமயம் என்ற விஷயம் சக்திதாசன் மூலம் அவருக்குத் தெரிந்திருந்தது. - 'உமது துணிச்சலை பாராட்டுகிறேன். தமிழுக் காக, தமிழ் இலக்கியத்துக்காக, பாடுபட வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறுவது ரொம்பத் துணிச்சலான செயல்தான். வெற்றி கிட்டுகிற வரை வீட்டின் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வீட்டுக்குத் திரும்பிப் போகாமல் இரும்’ என்று உற்சாகப்படுத்தினார் வ.ரா. .w. சமுதாயத்தைச் சாடுவதிலும், சமூகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் வ.ரா. தீவிரமாக இருந்தார். அதனால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், பொதுவாக அதிர்ச்சி தரக்கூடிய எண்ணங்களை அவர் உரத்துப் பேசினார்.