பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் எல்லாம் மறந்து விட்டு, நாங்கள் உங்களை எக்ஸ் ப்ளாயிட் பண்ணுவதாகச் சொல்கிறீர்கள். உண்மை யில் நாங்கள் உங்களை எக்ஸ்ப்ளாயிட் பண்ணத் தொடங்கினால், உங்களால் வாழ முடியாது. நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள்!' என்று சீதாராம் கடுமையாகப் பேசினார். "தான் நினைத்தால் கிராம ஊழியனை வாழ விடாமல் செய்ய முடியும். ஊழியன் நின்று போகும்’ என்றார் கு. ப. ரா. "அது உம்மால் முடியாது, கு. ப. ரா. நான் நினைத்தால் கிராம ஊழியன் ஸ்தாபனத்தையே மூடி விட முடியும்’ என்று சீதாராம் சவாலிட்டார். இருவருக்கு மிடையே மவுனமாக இருந்தார் அ. வெ. ர. கி. முடிவு என்ன? கு. ப. ரா.வின் நம்பிக்கை விழுந்து விட்டது. அவருடைய மென்மையான உள்ளம் வெகு வாக பாதிக்கப்பட்டது. அன்று இரவே அவர் திருச்சி போய் விட்டார். தனிப்பட்ட முறையில் அ. வெ. ர. கி. ரெட்டியார் கு. ப. ரா.வுக்கு நூறு ரூபாய் உதவியிருந்திருக்கலாம். அவருக்கு அது பெரிதல்ல. எனினும் அவர் உதவ முன் வரவில்லை. தனிப்பட்ட காரணங்கள் இருக் கவாம், . மறுநாள் அவர் என்னிடம் சொன்னார். இரண்டு பேரும் என்னை கேணையன்னு எண்ணிப் போட் டாங்க. பணம் போட்டு ஸ்தாபனத்தை நடத்துகிற வனை அவங்க ஒரு பொருட்டாகவே நினைக்கலே. நான் நினைத்தால் ஊழியனை சாகடிச்சிருவேன்னு