பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0ே வல்லிக்கண்ண்னின் ப்ோராட்டங்கள் இத்தனைக்கும் மேலாக மலருக்குத் தனிச் சிறப்பு தந்தது வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயரின் ஓடாதீர்!’ என்ற தனிரகக் கவிதை. புதுமைப்பித்தன் அந்தப் பெயரில் கவிதை எழுத ஆரம்பித்திருந்தார். ஒகோ உலகத்தீர், ஓடாதீர்!’ என்று தொடங்கும் நீளக் கவிதை இலக்கிய வாதிகளின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது அவருடைய முதல் கவிதை அல்ல. அவரது முதலாவது கவிதை உண்டுண்டு-கடவுளுக்குக் கண் உண்டு என்ப தாகும். அது ஊழியன் பொங்கல் மலரில் வெளி வந்தது. தரமான கதைகளும் கட்டுரைகளும் மலருக்குக் கனம் சேர்த்தன. இலங்கையின் மூத்த கதாசிரியர் கனான சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் கதை கள் வந்திருந்தன. அம்பிகைபாகன் கட்டுரை எழுதி யிருந்தார். பொதுவாக, தமிழ்நாட்டின் விசேஷ மலர்கள் எல்லாம் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார், மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதய்யர், மற்றும் மந்திரிகள், கவனிப்புக்கு உரிய பெரிய மனிதர்கள் எழுதிய கதை கட்டுரைக்குத்தான் முதல் மரியாதை கொடுத்துக் கொண்டிருந்தன. கிராம ஊழியன் ஆண்டு மலர் அந்த மரபை ஒதுக்கிவிட்டது. அம்பிகைபாகன் என்ற இலங்கை எழுத்தாளரின் கட்டுரைதான் முதல் இடம் பெற்றி ருந்தது. இலங்கை எழுத்தாளர்களின் தனி அபிமா னத்தைப் பெற்றிருந்த கிராம ஊழியன் இதன் மூலம்