பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் ! ? போகலாம் என்று நினைக்கையாக்கும்? அதுல்லாம் உன்னாலே முடியாது. சொக்கலிங்கம் பிள்ளை ஜர்னலிஸ்டிக் ஃபீல்டிலே முன்னேறி, பெரிய மனிதர் ஆகியிருக்கிறார்னா, அவர் கதையே வேறே. அவருக் குள்ள துணிச்சலும் திறமையும் சாதாரணமா மத்த வங்களுக்கு வந்திராது. நீ எழுத்தாளனாகு. நான் வேண்டாம்னு சொல்லலே. ஆனால் எழுத்தாள னாகவே வாழ்ந்து வளரனும்கிறது நல்லது இல்லே. ரொம்ப சிரமமான காரியம். சுதந்திரமா இருக் கணும்னு ஆசைப்பட்டா, சொந்தமா ஒரு பிசினஸ் தொடங்கு. எனி பிசினஸ். சிறு கடை வையி. ஒரு பெட்டிக் கடையாக் கூட இருக்கலாம். அது முக்கிய மில்லே. ஃபர்ஸ்ட் என்டர் இன்ட்டு பிசினஸ். பணம் கிடைக்கிறதுக்கு அது உதவும். அதிலே இருந் துக்கிட்டே எழுது. உனக்கு நல்லதுக்குத் தான் சொல் கிறேன் என்று அவர் அறிவித்தார். பொதுவாக, எனக்கு நல்லது என்று மற்றவர்கள் கூறுகிற எதையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்புவ தில்லை. எனவே அந்தப் பெரியவரின் பொன் மொழி களையும் நான் பொருட் படுத்தவில்லை. மேலும், சேதுப்பிள்ளையையோ, சொக்கலிங்கம் பிள்ளையையோ நான் என் முன்னோடிகளாக, அல்லது வழி காட்டிகளாகக் கொள்ளவும் இல்லை. புதுமைப்பித்தன் மாதிரி, ந. பிச்சமூர்த்தி மாதிரி, கு. ப. ராஜகோபாலன் மாதிரி-அதாவது மணிக் கொடி எழுத்தாளர்கள் போல-நானும் சிறுகதை எழுத்தாளனாக வளர வேண்டும் என்று விரும் பினேன்.